பக்கம்:இனிய கதை.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60

                   60

மறுபடியும் இருமல் வந்து விட்டது. ரத்தமும் சளியுமாகத் தட்டு நிரம்பியது. இ ரு மி ய வேதனை கண்ணிருக்கு வழிவகுத்தது. ஐயோ... தலையணை யில் சாய்ந்துகொண்டேன். கமலாவைப் பார்த்தேன். அவள் கண்களில் கண்ணிரைக் கண்டேன் "அக்கா" என்று என்னை அப்படியே கட்டிக்கொண்டு என் தலையை மிருதுவாகத் தடவிக்கொடுத்தாள்.

இரவு வளர்ந்தது; பிறை நிலா விண்ணில சிலம்பம் பழகிக்கொண்டிருந்தது மின்னும் நட்சத்திரங்களுடன், ஊதல் காற்று வேறு ..

     "கமலம்!"
     "அக்கா"

"பார்த்தாயா, இன்னும் 'அவர் ' வீட்டுக்கு வரவில்லை. கொண்ட மனைவி குலேஉயிராக காய்ச்சவில் எமனுடன் போராடிக்கொண்டு சாகக் கிடக்கிருளே என்ற கவலை துளியாவது அவருக்கு இருந்தால் இப்படி அவர் வீட்டை மறந்து என்னையே மறந்து இருப்பாரா!"

    "உன் வீட்டுக்காரர் வரமாட்டார் என்றுதான் தோன்றுகிறது, அக்கா!"
    "இன்றைக்கா? அல்லது என்றுமேயா?”

"வீணுக ஒன்றை ஒன்பதாகப் பெருக்கி உடலைப் போட்டு அலட்டிக்கொள்ளாதே, அக்கா வேளை கெட்ட வேளையில் இப்படிப்பட்ட மன வேதனை கூடவே கூடாது என்று டாக்டர் சொன்னதை மறந்து விடுகிருயே..! இன்றுதான் அக்கா, அவர் வரமாட்டார். பட்டனத்துக்குப் புறப்பட்டாராம் உன் கணவர். என் அப்பா பார்த்தாராம்; சொன்னுர். நாளை, மறுநாள் வந்துவிடலாம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/45&oldid=1490169" இலிருந்து மீள்விக்கப்பட்டது