பக்கம்:இனிய கதை.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

61

                  61
 என் மேனி முழுமையும் மின்னுெளி பாய்ந்தது; 
பதைபதைத்தேன். என் கணவர் பட்டணத்துக்கு என் 
னிடம் சொல்லாமல் கொள்ளாமல் 
போனதைப்பற்றிக் கூட மனசை 
அலட்டிக்கொள்ளவில்லை. ஆளுல் இரண்டு நாள் 
முந்தி அவர் செய்த சபதம்தான் என்னைத் 
தூண்டிலிட்டு இழுத்து வேதனைப்படுத்தியது. உயிர் 
விளிம்பில் தொட்டும் தொடாமலும் என் உடம்பு 
உறவாடிக் கிடந்தது எவ்வளவு அபாக்கியவதி இந்த 
அபலை...!
 மலைக்கோட்டை மணி நடுநிசியில் இரண்டு முறை ஒலித்து முடங்கியது.
   'இவர் பட்டணம் போயிருக்கிருர். ஆம்; அவர் 
 சபதத்தை நிறைவேற்றப் பட்டணம் போய்விட்டார். 
ஆண்பிள்ளை அவர், நானே பெண்; பேதைப் 
பெண்...'
 என் உள்மனம் நினைவுச் சரத்தைத் தொடுத்துக் 
 கொண்டே போயிற்று, மனதிற்கு ஒய்வு ஏது? 
 ஒழிவு ஏது? சலனம், சலனம்தான் போலும்!   
சலனம் என்ருல் சாந்திக்கு வழி இராதா?
 கீறல் பட்ட இசைத்தட்டு ஒலிப்பதிவைத் திரும்பத் 
 திரும்ப ஒப்புவிக்குமல்லவா?  அதேபோல் அந்தச் 
 சம்பவம் என் நினைவில் தொப்பென்று குதித்து 
 நின்றது.
  'மங்களத்துக்கென்ன, அவளைப் பார்த்துவிட்டால் 
அவள் அழகில் சொக்கிப் போகாமல் எந்த 
மாப்பிள்ளை யும் தப்ப முடியாது!'
என்ருே ஒர் தினம், என் திருமணத்தின் முன் என் 
பெற்ருேர்கள் எனது  கல்யாணம்  பற்றி இப்படி 
விமரிசனம்  செய்துகொண்டிருந்தார்கள். அது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/46&oldid=1490289" இலிருந்து மீள்விக்கப்பட்டது