பக்கம்:இனிய கதை.pdf/48

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

63

                   63


அவள் மட்டும் கடந்த நாலு மாதமாக என்னுடன் 
இல்லையென்ருல் ...! என்ருே பிறந்த நட்பு- 
அவளுக்குத் தான் நான் என்ருல் எவ்வளவு 
பிரியம்... என்றென்றும் அவளுக்குக் கடமைப் 
பட்டவள். நான்.


  ஆனல்... என்றென்றும் என்னுடன் உயிருக் 
குயிராக இருக்க வேண்டிய, இருக்கக் 
கடமைப்பட்ட, இருப்பதாக அக்கினி சாட்சியாக 
உறுதி சொல்லி என் கைத்தலம்பற்றிய என் 
புருஷன்__அவர் நிலை, தற்போ தயப்போக்கு. 
அவர் ஆசை, முடிவு, எல்லாவற்றையும் விட அன்று 
என்னிடம் அவர் விருப்புடன் போட்ட அந்தச் சபதம்! 
அம்மம்மா...! ஐயையோ ...! பெண் ளுகப் 
பிறந்தாலே என்னுளும் துயர்தானே என்பதற்கு 
நான் ஒருத்திதான் எங்கள் வர்க்கத்தின் 
ஏகப்பிரதிநிதி யாக இருப்பேனே...? மங்கைராகப் 
பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று 
எங்கள் பெருமையைப் பாடிய கவிமணியின் 
திருவாக்குக்கு நானும் பெருமை பூணும் பாக்கியம் 
பெற்றிருக்கப்படாதா? தெய்வமே!


    சபதம்!... 


  சபதமா அது?


 அன்று...உண்டு முடித்துப் படுத்தவள்தான். 
ஆளுல் மறுநாள் உடம்பில் எனக்குக்காய்ச்சல் 
கண்டது. காய்ச்சலும் சாதாரணக் காய்ச்சலாக 
இல்லை, 'டபிள் திமோனியா' வேளைக்கு வேளை 
மருந்து, மருந்துக்கு மருந்து, ஊசிக்கு ஊசி அவர் 
பணத்தைத் தண்ணிராகத் தான் செலவழித்தார். 
ஆபீஸில் கொடுத்த சம்பளப் பணம் டாக்டரிடம் 
கைமாறியது. வீட்டிலிருந்து தூது சென்ற தந்தியின் 
பலகை அவருக்கு 'பாங்க் டிராப்ட்' ரூபாய் 
ஐநூறுக்கு வந்தது. பணம் வந்த மாயம் அறிந்து 
தானே என்னவோ, என் ஜாரமும் விஷமாக 
ஏறியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/48&oldid=1490290" இலிருந்து மீள்விக்கப்பட்டது