பக்கம்:இனிய கதை.pdf/49

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

 நாட்கள் மாதங்களாயின. காய்ச்சல் 
 முறைதவருமல் என்னைப் பற்றிக்கொண்டது. 
 ஏறக்குறைய இரண்டா யிரம் ரூபாயையும், என் 
 கணவரின் அயராத உடல் உழைப்பையும், 
 இடைவெளியாக ஒடிச்சென்றுவிட்ட மூன்று 
 மாதங்களையும் விழுங்கிவிட்டு 'ஏனே தானே' 
 வென்று என் உயிர்மட்டும் உடலில் ஒட்டிக்கொண்டு 
 இருந்தது.
 உலகத்தை அன்று தான் நான் திரும்பிப் 
 பார்த்தேன். பலபல நாட்களுக்குப் பின்-பலபல 
 யுகயுகாந்திரங்களுக்குப் பிறகு, அன்றுதான் முதன் 
 முதலாக பார்ப்பதுபோல என் துணை வரை மலர 
 விழித்துப் பார்த்தேன், ஆசையுடன். ஆசைக் கனவு 
 களுடன் - புனர்வாழ்வு பெற்ற பூரிப்புடன் 
 புதுவெள்ளத் தின் மிதப்புடன். 
 ஆனல்...இத்தனைக்கும் என் உரிமை 
 உரிமையாளர் பதிலுக்கு ஒரு புன்னகை 
இழையைக்கூட உதிர்க்கவில்லை. அவர் முகம் 
வெறுப்பின் கோளமாகக் காணப்பட்டது. அந்தக் 
 கோளத்தின் உருண்டை வடிவிலே எதிர்பாராத 
 ஏமாற்றத்தை என்பதியிடம் வெறுப்பு, விரக்தி, 
ஈடுபாடிழந்த போக்கு, பெரியதொரு துன்பப் பிளவு 
 ஆகியவைகளின் உருவங்களிலே கண்டேன் நான் 
 !உலகம் நிலைபெயர்ந்து அதில் நான் 
 வீழ்ந்தழிந்து விட்டமாதிரி துடித்துப்போனேன். 
 அதுவே தான் என் தாம்பத்தியத்தின் திரும்பு 
 முனையாக அமையுமென்று அன்று நான் என்ன 
 கண்டேன்பேதை?
 நான் ஒருத்தி இருப்பதையே அவர் மறந்து 
 விட்டார். அப்படித்தான் சொல்லின அவரது 
 அன்ருட நடவடிக்கைகள். இல்லையென்ருல், 
 செத்துப் பிழைத்த மனைவியிடம் ஆசைக்கு, 
 ஆறுதலுக்கு ஒரே ஒரு தேர்தல் வார்த்தைகூடவா 
 அவருக்குப் பஞ்சமாகி விட்டது? என் கணவர் என் 
 முன் புதிராகத்தான் தோன்றினர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/49&oldid=1489741" இலிருந்து மீள்விக்கப்பட்டது