பக்கம்:இனிய கதை.pdf/50

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

65

                   65

என் வாழ்வின் உயிர்ப்பே அப்பொழுது புதிராகத்தானே இயங்கியது .? ஆளுல் என் விதி...! இல்லை யென்றல் எப்படி அன்றைக்கு நான் அவரிடம் அந்தச் சபதத் தைக் கூறியிருக்க முடியும்...?

 ஏதோ ஒர்  தெம்பு ஊறியது; வெறிகனன்றது; நான் என் கணவரின் தனியறைக்குப் போனேன். அவர் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். நான் வந்ததை அவர் அறிவார்; அறிந்தார். என்னை அவர் முகங்கொடுத்துப் பார்க்கக்கூட இல்லை. எனக்கு நா துடித்தது.
 "...உங்களை ஒன்று கேட்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். உங் களிடம் ஏதோ ஒரு பெரிய மாறுதலை நான் இப்போ தெல்லாம் காணுகிறேன். ஏன் அப்படி? என்றேன் துயரம் சுருதி சேர்ந்த குரலில்.
 "...நானும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று தான் இருந்தேன். நீ முந்திவிட்டாய் ..நான் விரைவில் வேருெரு கலியாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்" என்று ஒரு பெரிய இடியை என் தலையில் அலக்காகத் தூக்கிப் போட்டார்.
 செந்தழலில் நான் வெந்தேன்; இறவாமல் இறந்து கொண்டிருந்தேன்.
 "வேருெரு திருமணம் செய்துகொள்ளப் போகிறீர் களா? நான் உயிருடன் இருக்கும்போதா? என் உயிர் உடலில் இருக்குமட்டும் மற்ருெருத்திக்கு ஒரு நாளும் இந்த மங்களம் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டாள் என்பதை மறவாதீர்கள்...” என்று அலறினேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/50&oldid=1490148" இலிருந்து மீள்விக்கப்பட்டது