பக்கம்:இனிய கதை.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68

                   68


      இன்று இப்படி என்னை விலக்கிவைத்து, 
       வாழாவெட்டி யாக்கச் சபதம் போட்டுச் 
       சென்றிருக்கிருர்?


         உச்சிப் பொழுது. 


   கமலா மருந்து கொணர்ந்தாள். கையில் வாங்கி 
   யவள் குடிப்பதற்கு யோசித்தேன். அதே 
   சடுதியில் எதிரே நோக்கினேன் ஆ! என் தலை 
   சுழன்றது; நான் சுழன்றேன். எதிரே நின்ற 
  நிலைக்கண் ணுடியில் பிரதி பலித்த என் 
   உருவத்தைப் பார்த்தேன். ரத்தமே அற்றுப் 
  போய், பார்க்கவும் கூசும் முகத்துடன் குச்சி 
  போன்று வெறும் உயிர்க் கூட்டைத்தான் 
   அப்பொழுது கண்ணுடி யில் கண்டேன். அழுகை 
   வெடித்துக் கிளம்பிற்று. ரோஜாவாக இருந்த 
  நான் எப்படி மாறிப்போய் விட்டிருக்கிறேன்...! 
  நான் உண்மையிலேயே மங்களம் தான..? மது 
  தீர்ந்து வெறுமையுடன் நிற்கும் மலர், தன்னைத் 
 துறந்து வேறு மலருக்குத் தாவிச் செல்லும் 
 வண்டைக் கண்டு பெருமூச்செறிய, 
 அம்மலரைக்கண்டு நான் மனங் கலங்கியதும் 
  நினைவுக்கு வந்தது. அப்பொழுதுதான் எனக்குப் 
 புரிய ஆரம்பித்தது என் கணவரின் 
  மாற்றத்துக்கு__மாற்றம் போதித்த சபதத் துக்குக் 
  காரணம் என் கணவர் என்னைச் சீந்தாததன் 
 காரணங்களை அப்போதுதான் என் பெண் 
 நெஞ்சம் உணரத் தொடங்கியது. அனைத்துக்கும் 
 காரணம் எனது அழகு முழுதும் தேய்ந்தழிந்து 
 போனதுதான்..!இதை திரும்பவும் மனசில் 
 நினைக்கும்போதில், என் ஆவி பிரிந்துவிட்டால் 
 போதுமென்றிருக்கிறதே! அந்தோ...!


   அந்தக் கதை! கையில் பிரித்து வைத்திருந்த 
   அந்தக் கதை என் நெஞ்சலைகளைப் 
  புரட்டிவிட்டவாறு என் நினைவின் சுருதியாய் 
  இயங்கிக் கிட்ந்தது.


      வாய்த்த கணவனின் கடைசி ஆசையைப் 
   பூர்த்தி செய்யவேண்டி, வாய்த்த மனைவியே 
  அவனைத் தான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/53&oldid=1490339" இலிருந்து மீள்விக்கப்பட்டது