பக்கம்:இனிய கதை.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70

                     70
 என் உயிர் துணை வரை தோளுடன் அனைத்துத் 
 தாங்கியவாறு டிரைவர் மெல்லப் படுக்கையில் 
 படுக்க வைத்தார். அவரையே இமைக்காமல் 
 பார்த்துக்கொண் டிருந்த என் இமைகளில் 
 கண்ணிர்க்குளம் சுரந்து வழிந்தது.
 அவர் கண்ணைத் திறக்க அரைமணியானது. அப் 
 பொழுதுதான் எனக்கு நல்ல மூச்சு வந்தது; உயிர் 
 மீண்டது. ஒடிப்போய் என் தாலியை 
 விளக்கொளியில் புன்னகைத்த தேவியின் முன் 
 வைத்துக் கும்பிட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டு, 
 கணவரிடம் ஒடினேன்,

"மங்களம்...!"

 "உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள். நான் இன்று 
 கமலாவுடன் உங்களைப் பார்க்கப் பட்டணம் 
 புறப்படவிருந்தேன். நானே இருந்து உங்களுடைய 
 திருமணத்தை நடத்தத்தான் புறப்பட்டேன். ஆனல் 
 இப்படி உங்களை உடம்பெல்லாம் காயக் 
 கட்டுகளுடன் காண்பேன் என்று கனவில்கூட 
 எண்ணவில்லைநான்..."என்று விக்கலுக்கும் 
 விம்மலுக்குமிடையே கூறினேன்.

"மங்களம், நீ என் தேடிவந்த தெய்வம். முன் ஒரு நாள் நான் சாகக் கிடந்தபோது, உன் தாலிப் பலம் தான் என்னைக் காப்பாற்றியது. இன்றும் அப்படித் தான், உன் தாலிதான் என் உயிரை உன்னிடம் மீட்டுச் சேர்த்தது. இல்லை யென்ருல் நான் கார் விபத்தில் இந்நேரம் செத்திருப்பேன். விபத்தில் அகப்பட்டு அடிபட்ட என்ன ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு மணி நேரம் கழிந்துதான் எனக்கு நினைவு வந்த்து, அங்குவந்த வயதான கிழவிஒருத்தி என்நிலைக்கு இரங்கி "பாவம் எந்தப் புண்ணியவதியின் தாலி மகிமையோ பையன் இந்தமட்டும் தப்பிச்சிருக்கிருன்.தலைக்குவந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/55&oldid=1489753" இலிருந்து மீள்விக்கப்பட்டது