பக்கம்:இனிய கதை.pdf/56

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

71

                       71


       தலைப்பாகையோடே  போயிட்டுது...” 
      என்று உணர்ந்து சொன்ன சொற்கள் என் 
      கண்களைத் திறந்துவிட்டன. மங்களம், என் 
     குற்றத்துக்குத் தண்டனை அடைந்து விட்டேன். 
      இல்லை யென் ருல் பெண் பார்க்கப் போன 
    வழியில் இப்படி விபத்து நேர்ந்திருக்குமா? 
      மங்களம், என்னை மன்னித்துவிடு. கடந்த 
    நாட்கள் கண்ணிருடன் கழியட்டும். அடுத்த 
    வாரம் உன்னைப் பட்டணம் கூட்டிப் போகப் 
     போகிறேன். உன்னைப் பழைய என் மங்கள 
   மாக்க, என் டாக்டர் நண்பர் ஒருவர் 
    உறுதிசொல்லி இருக்கிறர்.


   அவர்-என் கணவர் என் தலைமயிரை அன்புடன் 
   கோதிவிட்டார். இந்த இன்ப ஸ்பரிசம் என் மீது 
   பட்டு எவ்வளவு யுகங்களாகிவிட்டன! முழு 
   உரிமை பூசி கண்களுடன் என் கணவரை... 
  ஆம்; என் கன வரை ஆனந்தத்துடன் ஆழ்ந்து 
 பார்த்தேன். என் கண்களில் கண்ணிர்; அவர் 
 கண்களில் கண்ணிர். என்னையே நான் 
 மறந்தேன்.


      அப்பொழுது 'தபால்' என்ற ஒலி கேட்டது; 
    ஒடினேன்  .தபால் ஒன்று வந்தது; அது என் 
    துணைவருக்கு. பிரிக்கச் சொன்னர்; 
   படித்தேன்.


          "சேகர் அத்தான் அவர்களுக்கு


    நீங்கள் என்ன இரண்டாந்தாரமாக மணந்து 
    கொள்ள, என் அப்பாவிடம் பெற்றுவிட்ட ‌‌ 
   உ‌‌ரிமையை அறிந்தேன். உங்களை அடைய 
   நாளெல்லாம் கனவு கண்ட சமயம் ஒன்று 
   இருந்தது. மெய். ஆனல் அவ் வுரிமை அன்றே 
   மங்களம் அக்காளுக்குச் சார்ந்ததாகி விட்டதே. ! 
  ஒரு பெண்ணின் கண்ணிர்த் தளத்தில் 
   வாழ்வைத் தொடங்க எந்த இதயமுள்ள 
  இன்னுெரு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/56&oldid=1490344" இலிருந்து மீள்விக்கப்பட்டது