பக்கம்:இனிய கதை.pdf/57

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72

                       72


     பெண் இதயமும் சம்மதிக்காது. 
     இன்னுெருத்தியின் கூந்தலிலிருந்த பூவை 
     ஒரு பெண் தன் தலையில் சுமந்து கொள்ள 
     விரும்பமாட்டாள்; அதில் பூர்ண மலர்ச்சியும், 
      மணமும் இராது. அப்பாவின் உரிமை இனி 
     உங்கள் வரை செல்லுபடியாகாது. என் மீது  
     உங்களுக்கு உண்மை அன்பிருந்தால், தயவு 
    செய்து அந்த அன்பு பூராவையும் மங்களம் 
   அக்காளுக்கு அளித்து, அவளுக்கு மறு பிறவி 
   அருளுங்கள். கைப்பிடித்த கணவராகிய உங்கள் 
   கடமை அது. நீங்கள் அவளுக்கு அன்று தெய்வ 
   சாட்சியாகப் பூட்டிய தாலியின் ஆணை அது. 
  அவளது உரிமை அது!


                             இப்படிக்கு, 
                              லலிதா"



     நான் ஏந்தி நின்ற என் தாலியின் மீது எங்கள் 
     இருவரின் ஆனந்தக் கண்ணிரை அன்புக் 
     காணிக்கை யாகச் 
     சமர்ப்பித்துக்கொண்டிருந்தோம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/57&oldid=1490343" இலிருந்து மீள்விக்கப்பட்டது