பக்கம்:இனிய கதை.pdf/58

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கூப்பிட்ட குரல்



     மினர்வா தியேட்டரை ஒரு பார்வை பார்த்துக் 
    கொண்டே ஏர்க் காலிலே ஒர் அழுத்தம் 
   கொடுத்துப் பற்றியவாறு, தாதா முத்தியப்பன் 
   தெருவுக்கு மடங் கிளுன் மணிமுத்தன். 
   குதிகாலில், ரிக்ஷாவின் சக்கரங்கள் பட்டுப்பட்டு 
   விலகின. அந்தி சந்தி வேளை. ஆலுைம், 
   வெய்யிலின் உக்கிரம் தணிந்தால்தானே?



       'ஒரு வழிப்பாதை' என்ற சட்டத்திற்குத் 
       திரை யிட்ட ஒரு லாரிக்காரன், 
       நல்லவேளை மணிமுத்தன்மீது மோதாமல், 
      சட்டத்தை மோதிய பெருமையுடன் பறந் 
      தான். போலீஸ் விஸில்' ஒளியை அவன் 
      செவிமடுக்க, பைத்தியமா, என்ன?


      'பிராட்வே' வந்தது. சீனத்துக் கடைத் 
    தெருவை நாடி ஓடினன். 'கிராக்கி' 
    கிடைக்கும்; 'துட்டும் கிட்டும். நடைபாதைக் 
   குடும்பம் ஒன்று அவன் பார்வைக்குக் குறி 
   வைத்தது. ரிக்ஷாவின் கைப் பிடியை 
   லாகவமாகப் பற்றியவனுக, மூச்சையும் பற்றிப் 
   பிடித்துக்கொண்டு,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/58&oldid=1490346" இலிருந்து மீள்விக்கப்பட்டது