பக்கம்:இனிய கதை.pdf/60

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

75

                   75


    "ஒ.கே!"


    நெரித்துப் புடைத்த மனித மந்தை, பஸ், கார் 
    வகையருக்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது 
   ரிக்ஷா, முத்தாயியின் காதலுக்கு வசப்பட்ட 
   இன்பக் கனவின் நிழலாட்டம் திரை ஓவியமாக 
   அந்த ஏழையின் நெஞ் சரங்கில் ஓடிக் 
  கொண்டேயிருந்தது. ஒரு வருஷத்துக்கு முன்.


    ஒரு நாள் :


      மினர்வாவுக்குச் சவாரி ஏற்றிவந்தான் 
      மணிமுத்தன் கால் சூடு கபாலத்தில் 
     தாக்கியது. 
    ஆதித்த பகவானின் கிரணங்கள். அதுவே 
   அவனுடைய இருள் எனும் கிரணத்தைப் 
    போக்கடிக்கும் கிரண் மென்பதை அவன் எப்படி 
   அறிய முடியும்? பசி வயிற்றைக் கிள்ளவே, 
   சாயாக் கடைக்குள் அடி எடுத்து வைக்கப் 
   போனுன். அத்தருணத்தில், அருகிலே 
   சோற்றுக்காரி ஒருத்தி அம்பிகையாய்த் 
  தோன்றினுள். படியளக்கும் பாவை யாகக் காட்சி 
  அளித்தாள். வியர்வையைத் தெருக் குழா 
   யடியில் வழித்துப் போட்டுவிட்டு நடந்தான். 
  ரிக்ஷாவை ஒரமாக நிறுத்தினன். சோறு 
  கேட்டான். கேட்டுக் கொண்டே, பணம் எடுக்க 
  முனைந்தான். ஏமாற்றம் விடுகதை போட்டது. 
  அவனது சின்னஞ்சிறு நாலணு பிளாஸ்டிக் 
 பெட்டகத்தைக் காணவில்லை. என்ன 
 அஜாக்கிரதை! எங்கே விழுந்தது?



   "இன்ன ரோ சிக்கிறே?... துட்டு 
   இல்லியா?...ம், சரி, துன்னு!...” என்று 
   சாப்பாட்டுப் பட்டையை நீட்டி வெஞ்சனமும் 
   வைத்தாள் அந்தப் பெண்.


   மணிமுத்தனுக்கு அவளுடைய அந்த அன்புச் 
    செயலில், பசியெல்லாம் 'கடலே கதி’யென்று 
    ஒடி விட்டது. அவளுடைய ஆணேப்படி அவன் ‌‌ 
  உ‌ண்டான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/60&oldid=1490348" இலிருந்து மீள்விக்கப்பட்டது