பக்கம்:இனிய கதை.pdf/61

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76

                        76


        சோறு, சொர்க்கத்தைக் காட்டாதா? 
    மணிமுத்தனுக்கு முத்தாயி வாழ்க்கைப்பட்டாள்!
"சாமி, ஏறங்குங்க!" என்ருன் மணிமுத்தன் 
     ரிக்ஷாவினின்றும் இறங்கிய ஸ்லாக் சட்டை 
     இளைஞர் சுற்று முற்றும் பார்வையைத் 
     திரைவிரித்தார். இருள்திரை 
     விலக்கப்பட்டிருந்தது. 'இந்த நடைபாதைக் 
     குடிசைக்கு முன்னலே என்னை நிறுத்தி 
      விட்டிருக் கிருனே? ஏன்?"


      "ஏனப்பா, நான் தங்கசாலைக்குப் போக 
     வேண்டு மென்று சொல்ல வில்லையா?”


"யாரு சாமி இல்லேன் சொன்ன?"



       " பின்னே...?


      "சாமி சாமி!...எம்பொஞ்சாதிக்கு விஷ 
      சொரமுங்க நாலு நாளாச் சாப்பிட்ட 
      மருந்துங்க ஒரு பலனையும் தரலே, 
      ஒங்களைக் கண்டதும், எனக்குத் 
     தெய்வத்தைக் கண்டாப்பிலே தோனுச்சு, 
     ஒருவாட்டி  வந்து பார்த்து மருந்துகுடுங்க. 
     இந்தஏழைகையிலே இருக்கிறதுட்டைத் 
    தாரேனுங்க, சாமி!... கண்ணு மூடித் 
    திறக்கிறத்துக் குள்ளே உங்களைத் 
    தங்கசாலையிலே சேர்த்துப்புடு றேங்க. பெரிய 
   மனசு பண்ணுங்க, டாக்டர் துரையே!” என்று 
    விம்மினன் ரிக்ஷா ஒட்டி,



    அந்த இளைஞனுக்குத் திகைப்பு வளர்ந்தது. 
    "நான் டாக்டர் இல்லேப்பா!"


     "ஏஞ்சாமி இப்படிப் பொய் பேசுறீங்க?...இந்த 
     ஏழையைக் கண்டதும் ஒங்க உத்தியோகம்கூட 
   மறந்து போச்சா? ஐயையோ!...முத்தாயி..."


    அவன் கேவிஞன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/61&oldid=1490353" இலிருந்து மீள்விக்கப்பட்டது