பக்கம்:இனிய கதை.pdf/62

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

77

                       77


    அப்போதுதான் அந்த நபருக்கு விஷயம் 
    புரிந்தது. தன்னைத்தானே ஒரு முறை 
   பார்த்தார் சட்டையில் தான் வைத்திருந்த 
   ஸ்டெதஸ்கோப்பை__நாடிக்குழலைப் 
     பார்த்துக்கொண்டார்.


  "இந்தப்பா! நான் டாக்டர் இல்லை; சத்தியம் 
  நம்பு..."



   "எம் பொஞ்சாதி சாகப் பிழைக்கக் கிடக்கிரு. 
   ஒனக்கு ஈவிரக்கம் இல்லையா!...நீ பின்னே 
  படிச்ச தெல்லாம் இப்பிடிப் புளுகத்தான? 
 தூ!...நீ வெறும் மனுசன்!..." என்று உணர்ச்சி 
 வசப்பட்டுக் கூறியவாறு, அந்த இளைஞனின் 
 கன்னத்தில் அறைந்து விட்டான் ரிக்ஷாக்கார 
 மணிமுத்தன்.


   அக்கணத்தில், அங்கே 'டாக்ஸி' ஒன்று வந்து 
   நின்றது. அதிலிருந்து இறங்கிய மனிதர், 
   புயலாக மணிமுத்தன் முடியைப் பற்றி, ஏண்டா 
  நாயே" என்று கர்ச்சனை செய்தவாறு கை 
  ஓங்கிய வேளையல் ஸ்லாக் சட்டை இளைஞன் 
   பாய்ந்து தடுத்தான். "அண்ணு! தவறு இந்த 
   ஏழையினுடையதல்ல. என்னுடையது. அவனை 
  ஒன்றும் செய்யாதீர்கள். நேற்றைய நாடகத் 
  திற்காக நான் உங்களுடைய ஸ்டெதஸ்கோப்பை 
 வாங்கி யிருந்தேனல்லவா? அதை. அப்படியே 
 சட்டையில் வைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். 
  நாடிக்கருவி யைக்கண்டவுடன், என்னை அசல் 
 டாக்டரென்று நம்பிய இந்த ஏழை, நான் சத்தியம் 
 பண்ணியும் நம்ப மறுத்து விட்டான்!. இவன் 
 மனைவி சாகப்பிழைக்கக் கிடக்கின்ற வேதனை 
 தூண்டியவெறியில்தான் என்னை அறைந்தான்! 
 பாவம்!...அண்ணு, எனக்காக ஒரு உபகாரம் 
 செய்யுங்கள். அடுத்த தெரு திருப்பத்தில் உங்கள் 
 காரைமறித்து அரைமணிக்கு முன் இதே 
  ரிக்ஷாக்காரன்தான் கெஞ்சிக் கொண்டிருந்தான். 
  தூரத்தே நின்று திரும்பிய நான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/62&oldid=1490357" இலிருந்து மீள்விக்கப்பட்டது