பக்கம்:இனிய கதை.pdf/63

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78

                        78


       அக்காட்சியைப் பார்த்தேன். ஆபத்துக்குதவ 
       வேண்டு மென்றுதான் அவன் விம்மி 
     வெடித்திருக்க வேண்டும். உங்களுக்கு ஏதோ 
    அவசரம். காரில் பறந்துவிட்டீர்கள்!... அண் 
    ணு, எனக்காக இப்போது ஒர் உபகாரம் செய் 
    யுங்கள். இந்த ஏழையின் மனைவியைப் 
     பிழைக்கச் செய்யுங்கள், அண்ணு!


    இளைஞன் வேதனை விம்ம, கண்ணிர் 
   வெடிக்கப் பேசினன். ஒலைகள் பிய்ந்து கிடந்த 
   குடிசையில் பெண் உருவம் ஒன்று 
   படுத்துக்கிடந்த காட்சியை அவன் கண்டிருக்க 
   வேண்டும்.


     "சரி தம்பி, கடமையிலே மனிதத் 
     தன்மையோடும் ஈவிரக்கம் கூடிய அன்புடனும் 
    நடக்கும் எனக்குக்கூட இப்படிப்பட்ட 
   சோதனைகளை ஆண்டவன் ஏன் தான் 
   உண்டாக்குகிருரோ? நீ போ. தம்பி இந்த ரிக்ஷா 
   வாலாவின் பெண் சாதியைப் பிழைக்க 
   வைக்கிறேன்!...”
    ரிக்ஷாக்காரன் நீர் சோர நின்றவன்,"‘சாமி 
   முதல்லே ஒங்களைக் கொண்டுபோய்த் 
   தங்கசாலையிலே இறக்கிப்புடுகிறேன் சாமி!” 
  என்ருன் இளைஞனிடம்.


     "இருக்கட்டுமப்பா. முதலில் உன் பெண் 
      சாதிக்கு சிகிச்சை செய்து விட்டபிறகு 
     தம்பியை நானே காரில் தங்கசாலையில் 
    கொண்டுபோய் இறக்கிவிட்டுக்கொள் கிறேன்.' 
    என்றவாறு அசல் டாக்டர் குடிசைக்குள் 
   நுழைந்தார்.


     "மாமோ!.. நம்ப அத்தை கோபிச்சுக்கினு 
     கண்ணு ரொண்டையும் தொறக்கவே 
   மாட்டேங்குது மாமாவ்!...” என்று ஒரு 
    சிறுமியின் குரல் அவர்களை வரவேற்றது.


     பூசாரி வரம் கொடுத்தபோது, தெய்வம் 
   மறுத்து விட்டதோ?...     _________
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/63&oldid=1490355" இலிருந்து மீள்விக்கப்பட்டது