பக்கம்:இனிய கதை.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

                       80


    டது கணக்கிலே கண்ணுக்குள்ளே நிற்குது. 
    ஊம் "என்று மனதிற்குள் 
   சொல்லிக்கொண்டாள் வள்ளி, அப்பொழுது 
   அவளுக்கு நல்ல வேளையாக சுயநினைவும் 
   வந்து குதித்தது. அவள் நடந்தாள்; கால் 
   சதங்கைகள் சிருங்காரப் பண் பாடின.



      காதி வஸ்திராலயத்தின் கட்டிடத்தைத் 
      தாண்டி விட்டால் முனங்கில் இருப்பதுதான் 
     வள்ளியின் வீடு, முனை திரும்பினுள். 
     அவளேச் சுற்றி வளைத்து விடுவது போல 
     'பாண்டு' முழங்க வண்டியொன்று வந்தது. 
     நோட்டிஸ் பல காற்றில் பறந்தன. வண்டியை 
     ஒருமுறை நோட்டம் விட்டு பிறகு பற்றிய 
     காகிதத் துண்டில் பார்வையைப் பரப்பினுள். 
    புள்ளி விபரங்கள் கிடைத்தன நாடகக் 
    கம்பெனியாரது நாடகம் நடராஜர் கோவில் 
    கடைசித் திருவிழாவில் நடப்பதற்குரிய 
    அறிவிப்பு இருந்தது நோட்டீஸில்.



     "சபாசு...! வள்ளி திருமணமாமில்லே .. 
     ஷோக்காத் தான் இருக்கும். அதுவும் 
     ராஜபார்ட் சுகுமாரன் வேலன், வேடன், 
    விருத்தணுக வேஷம் கட்டி நடிக்கிற துன் னு 
     ஒண்டக்கூட பொட்டு இடம் லேசிலே அம்பி 
    டாதே... அடுத்த வீட்டு கோவிந்தம்மாவையும் 
    துணை சேர்த்துக்கிட்டு மூச்சுக் காட்டாமல் 
   நாடகத்துக்குப் போயிட்டு வரவேண்டியதுதான். 
    மில்லுப் பொட்டலிலே தான் கூத்து. பார்த்த 
  சுவடு அப்பாவுக்குத் தெரியாமல் வந்துடலாம். 
  ஆமா, அதுதான் சரி..."


    நாடகப் பத்திரிகையில் இருந்த ராஜபார்ட் 
   சுகுமார னின் அழகு சொட்டும் உருவத்தை ஒரு 
    தவணை நிமிர்ந்து உன்னிப்பாக உற்சாகம் 
   குமிழியிடப் பார்த் தாள்; அதை அப்படியே 
   கைக்குள் அடக்கிக் கொண்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/65&oldid=1490350" இலிருந்து மீள்விக்கப்பட்டது