பக்கம்:இனிய கதை.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

81

                   81
   டாள். அடுத்த விநாடி, அவள் கால்கள் 
   இரண்டும் பின் வாங்கின. அவள் தகப்பன் 
  மாசிமலைத் தேவரின் வார்த்தைகள் காதுகளில் 
  முழங்கின; “அஞ்சலே, உன் பொண்ணுக் கிட்டே 
  சொல்லிப்போடு. இனியும் அது பேச்சுக்கு 'உம்' 
 கொட்டி சும்மா குந்தியிருக்க ஏலாது; வயசுப் 
 பொண்ணை காலா காலத்திலே ஒரு ஆண் 
 பிள்ளைகிட்டே ஒப்படைச்சாத்தானே நமக்கு மனசு 
 நிம்மதிப்படும் . பூவத்தக்குடியிலே உள்ள சின்னை 
 யாத் தேவர் மகன் சிங்காரம்தான் நமக்கு மருமகப் 
 பையன்... தை பிறந்ததும் நாள் பார்த்துப் பரிசம் 
 'போட்டுக் கண்ணுலம் செஞ்சிட 
 வேண்டியதுதான்..!"


  குளித்து முழுகி வந்தவளுக்கு மாற்றுப் புடவை 
  கட்டிக் கொள்ளும் நினைவு மறந்து தன் நிலை 
  மறந்து பதுமையென எவ்வளவு நேரந்தான் 
   வள்ளி நின்றிருந் தாளோ...? நீர் மண்டியிருந்த 
  விழி வட்டங்களில் நாடக நோட்டிலில் கண்ட 
  அந்த ராஜபார்ட் சுகுமாரனின் உருவம் நிழலாடிக் 
  கொண்டிருந்தது.


  நகரத்தார் புதுமடத்தின் முகப்பில் கையில் 
  தாங்கிய கன்னத்துடன் சுவருடன் சுவராகச் 
  சாய்ந்த வண்ணம் நின்றுகொண்டிருந்தாள் 
  வள்ளி. அவள் நெஞ்சில் புயல் வீசியது; புயல் 
  அவளது அழகு கொழிக்கும் முகத்தை 
  அலைக்கழித்துவிட்டிருந்தது.


   அன்று இரண்டாம் திருவிழா, பிட்டுக்கு மண் 
  சுமந்தவரின் கொண்டாட்டம். கோவில் கோலாகல 
 மாகக் காட்சி தந்துகொண்டிருந்தது.

  வள்ளிக்கு எதிலும் சிந்தையில்லை. அவள் 
  சஞ்சரித்த உலகம் தனி, விந்தை உலகம் அது. 
  அதில் அன்று நாடக நோட்டிஸில் காட்சியளித்த 
  ராஜபார்ட்காரன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/66&oldid=1490384" இலிருந்து மீள்விக்கப்பட்டது