பக்கம்:இனிய கதை.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82


         புன்முறுவல்கோலத்துடன் ஜம்’மென்று 
         தோன்றினன். வள்ளியும் நாணம் கதை 
          சொல்ல கால் பெருவிரல் பூமியில் 
        புள்ளிக் கோலம் போட ஒயிலுடன் 
        நின்ருள். இவர்களிருவரையும் 
        இணைக்கும் பாலமாகக் காட்சியளித் தது. 
       அப்பொழுது அவளுடைய பிஞ்சுவிரலில் 
       கொஞ்சிக் கிடந்த அழகிய மோதிரம் 
        ஒன்று.



         போன ஆண்டு நடந்த கதை அது. 
         எண்ண ஆரம் பித்தாள். வள்ளிக்கு 
        இன்பம் பாதியும் அச்சம் பாதியு மாக 
        இருந்தது. இரண்டுக்கும் காரணம் 
         இருந்தது. அதுதானே கதை!



        கடந்த ஆண்டில் சுனை முழக்கம் விழா 
       அமர்க்களப் பட்டது. கோவிலை 
      அடுத்திருந்த சுனையின் பெருமை 
       தலைமுறை தலைமுறையான 
      விஷயம்.நடராஜர் திருவிழாவின் கடைசி 
     நாளில் சுனையினின்றும் பலதரப் பட்ட 
     வாத்தியங்களின் நாதமுழக்கம் அந்தக் 
     காலத்தில் கேட்டதாம். தேவர்கள் ஒன்றுகூடி 
     சுனை முழக்கம் செய்ததாகப் பெரியவர்கள் 
    ஐதீகம் சொன் ஞர்கன். அன்று தொட்டு சுனே 
    முழக்கம் என்று தனி விழாவே கொண்டாடத் 
    தொடங்கிஞர்கள். அன்றையச் சுனை முழக்கத் 
    திருவிழாவுக்கு, இதே ராஜபார்ட் சுகுமாரன் 
    கோஷ்டிதான் நாடகம் போட்டார்கள். கோவலன் 
    நாடகத்தை வள்ளி ரசித்தது இம்மட்டு 
    அம்மட்டல்ல. கோவலன் வேஷம் தாங்கியவன் 
    இதே ராஜபார்ட் சுகுமாரன்தான், அவனது 
    கொள்ளை எழில் அவள் நெஞ்சைக் கொள்ளை 
   கொண்டது. அவள் தன்னுள் புது உணர்வு 
    கிளுகிளுப்பதை உணர்ந்தாள்.



         மறுநாள் பொழுது விடிய, சர்க்கார் 
         பள்ளிக்கூடக் கிணற்றுக்குத் தண்ணிர் 
         கொணரச் சென்ருள் வள்ளி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/67&oldid=1490423" இலிருந்து மீள்விக்கப்பட்டது