பக்கம்:இனிய கதை.pdf/68

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

83

                     83


        தண்ணிருடன் திரும்புகையில் புளிய 
      மரத்தடியில் சற்று நேரம் காலார நின்ருள். 
     அவள் நின்றதற்குப் புதுக் காரணமும் 
     இல்லாமல் போய்விடவில்லை. அந்த வழியே 
     ராஜபார்ட்காரன் ஒயில் நடை 
      போட்டுக்கொண்டு வந்தான். மூக்கில் 
      விரலைவைத்து கண் மூடித் திறக்கும் நேரம் 
     பலமாக யோசனை பண்ணினுள். அந்த 
    நாடகக் காரனுடன் எப்படியும் ஒரே ஒரு 
    வார்த்தையாகிலும் பேச வேண்டும் 
    போலிருந்தது. மறு நிமிஷம் பலே என்று சூள் 
    கொட்டினுள். கைக்குள் அடங்கிக் கிடந்த 
    அந்தச் சங்கிலியைக் கீழே நழுவ விட்டாள். 
    அப்புறம் அவள் தலையை நிமிர்த்தினுள். 
   அங்கு அந்த நாடகக்காரன் 
    நின்றுகொண்டிருந்தான்.



         'கொஞ்சம் தண்ணி வேணும். ரொம்பத் 
           தாகமா யிருக்கிறது’.


            இந்தாங்க, அப்படியே ஒருமுட்டாக் 
            குடத்தோடே வேனுமானுலும் 
            குடியுங்க. எனக்கு அட்டியில்லே...'



       'நாடகத்திலே நான் கடோத்கஜன்வேஷம் 
       கட்டி னு லாச்சும் முடியுமான்னு ஒரு கை 
       பார்ப்பேன். அம்மாடி யோ... எனக்கு 
       இப்போது தேவை ஒரு மடக்குத் 
      தண்ணிதாளுக்கும். !



        அவன் வாய்விட்டுச் சிரித்தான். 
        தண்ணிரைக் குடித் தான். அது  
       அமிர்தமாக இனித்திருக்க வேண்டும். 
        உதடுகளில் நுனி நாக்கு இழைந்தது. 
       ஆகா என்ருன்.



        அவள் இதழ் நுனியில் புன்சிரிப்புக் 
       குலுங்கியது. மச்சான் என்று உறவுச் சொல் 
        கேள்விமுறையில்லாமல் அவள் 
        உதட்டினின்றும் உதிர்ந்தது. கணத்தில் 
         தன் நிலை அவளுக்குப் பாடம் 
       சொல்லிவிட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/68&oldid=1490422" இலிருந்து மீள்விக்கப்பட்டது