பக்கம்:இனிய கதை.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86

                   86



        களும் சுனை முழக்கக் கொண்டாட்டத்திலே 
        கூத்தும் கொம்மாளமுமாக  இருக்க, 
        பாவம் வள்ளி மட்டும் சதா சர்வகாலமும் 
        பவுன் மோதிரத்தையும் அதற்குரிய 
        நாடகக்காரனையுமே ஆலவட்டம் சுற்றிக் 
       கொண்டிருந் தாள் நாடகக்கார 
       இளைஞனின் புன்னகை முகமும், 
       மோகனக் கண்களும், கள்ள 
       விழிப்பார்வையும் கபடமற்ற போதைச் 
       சிரிப்பும் அவள் இதயத் திரையில் புனையா 
       ஒவியமாக அழகு செய்து தோன்றும் போது 
      'பாவம்! முன்னே பின்னே தெரியாத ஆண் 
       பிள்ளையை இப்படி ஏனம் ஏமாற்றி 
       விளையாட்டுக் காட்ட இந்தப் பொண்ணுக்கு 
      அசட்டு ரோசனை ஒடுச்சோ மனசிலே...! 
      என்ற அனுதாபம் பிறந்தது. அவள் 
       துடித்தாள்; மனச் சாட்சிக்கு மட்டும் 
       என்னவோ அவளால் 'ஜவாப்' சொல்ல 
       முடியவில்லை.



       'நடராச தெய்வமே, என் பிசகைப் 
        பொறுத்துக்க. தமாஷ் பண்ண 
        வேண்டித்தான் அந்த மச்சான-அந்த 
        டிராமாக்காரரை அப்படி 
        ஏமாத்தினேன்...... மேலைக்கு நாடகம் 
        நடக்கிறப்போ அவருகிட்டே அவருடைய 
        பொன் மோதிரத்தைக் கொடுத்து, நான் 
       மன்னிப்பு வேண்டிக்கிறேன்...அது 
       வரைக்கும் இந்தச் சங்கதி அப்பா காதுக்கு 
      எட்டாமச் செய்...சாமி!' என்று அவள் 
      வேண்டிக்கொண்டாள்.


‌ தெய்வம் சிரித்தது.


  அவள் வேண்டுதல் பலித்தது; அவள்கூத்தாடினுள்


     காலையில் டிராமா நோட்டிசைப் பார்த்தாள். 
    சென்ற வருஷம் ஆடிய அதே இளைஞன் தான் 
   இப்போது நாடக மாடப்போகிருன்...! இந்த 
   வாட்டி அந்த ஐயாகிட்டே அவருடைய 
   மோதிரத்தைக் கொடுத்துட்டாத்தான் எனக்கு 
   நல்ல தூக்கம் வரும் . ஆமா. இன்னும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/71&oldid=1490434" இலிருந்து மீள்விக்கப்பட்டது