பக்கம்:இனிய கதை.pdf/78

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 93


     மச்சாளுக்கிக்கிடுறதுக்கு நான் கண்ட களு 
     பலிச்சிட்டுது. இப்பத்தான் எனக்கு நல்ல 
     மூச்சுவருது. கோவிந் தம்மா வும் 
     என்னைப்பத்தி உங்ககிட்டச் சொன்னுச்சா..? 
     நிஜமாவே நான் கொடுத்துவச்சவள்தான்! 
     என்று புன்னகையுடன் சொல்லிய வள்ளி, 
     ராவணன் முறுக்கு மீசையை 
     ராஜபார்ட்காரனிடம் சமர்ப்பித்தாள்.



      மாசிமலைத்தேவர் கனைத்துக்கொண்டே 
      தோன்றி ஞர். 'பொண்ணு மாப்பிள்ளை 
      நாடகங்களெல்லாம் ஒரே 
      கூத்தால்லேயிருக்குது. 
      மாப்பிள்ளைக்குத்தான் முந்தியே 
      எங்கவள்ளியை தெரியும்போலே. ஆளு 
     எங்க வள்ளிக்கு மாப்பிள்ளையை 
      தெரியாதுபோல. மாப்பிள்ளையைத் 
    தெரியுமின்னுதர்னே அன்னிக்கு வள்ளியை 
    நாடகத் துக்குக்கூடப் போகப்படாதுன்னு 
   கண்டிப்புப் படுத்தி னேன். நாலு பேர் 
   மத்தியிலே வயசுப் பொண்ணு வந்து   
    நின்னதைப்  பார்த்தா, நீங்க என்னதான் 
    நினைச்சுப்பீங்களோன்னுதான் 
    அப்படிச்சொன்னேன்... மகளுக்குக்கூட 
   எம்பேரிலே வருத்தம்...சரி, மாப்பிள்ளை யும் 
    பொண்ணும் வாங்க.



   ...நல்ல நோம் வந்துடுச்சு. 
    பரிசம்போடவேணும். உங்க ரெண்டு தரப்பு 
    காதல் பரீட்சைக்கும் ஒரு முடிவு 
    வேணுமில்லையா..... ...ம்! என்ருர் தேவர் 
   விஷமப் புன்சிரிப்புடன்.


      அந்த வருஷம் சுனை முழக்கம் திருநாளில் 
     வள்ளிராஜபர்ர்ட் சுகுமாரன் ஜோடியைக் கண் 
    கொட்டாமல் பார்த்துத் தீர்த்ததைப்பற்றிக் 
    கதைகதையாகப் பேச ஆரம்பித்து 
    விட்டார்களாம். அவ்வூர் கிணற்றடி மகா 
    நாட்டுப் பெண்டிர் குழாம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/78&oldid=1490651" இலிருந்து மீள்விக்கப்பட்டது