பக்கம்:இனிய கதை.pdf/79

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 வலைச் சிலந்தி


       துப்பாக்கிக் கட்டையின் கைபிடியை 
      கைபிடித் துணியினுல் துடைத்து முடித்தபின் 
     மேஜை இழுப் பினின்றும் கிடைத்த துப்பாக்கி 
       ரவைகளை ஒன்று, இரண்டு, மூன்று 
      என்று எண்ணி, தனித்திருந்த தகரக் 
     குழாயில் போட்டுக்கொண்டிருந்தான் சுசீந்தர். 
    எஞ்சிக் கிடந்த ரவையைப் போடுவதற்குள் 
    சுருளலே முடி அழும்பு பண்ணியது. அதை 
    ஒரு பொருட்டாக ஏற்று மதிக்காதவன் போன்று 
    தன் பணியினை முடித்தான் அவன் 
    "நிலந்தெளிவதற்குள் நீயும் நானும் இங் 
    கிருந்து புறப்பட்டாகவேனும், இன்றைக்கு 
   மதியத் திலே உனக்கு ஒரு பரிசு 
   கொடுக்கப்போகிறேன்!” என்று உரைத்த 
   பாசத்தின் குரல் அவனது உந்திக் கமலத்தை 
   விட்டுப் புறப்பட்டது. புறப்பட்ட தொனி மணம் 
    பரப்பியது; அந்த இனிய நல்வாடை பொறி 
    யுணர்வுகள் அனைத்திலும் ஒன்றில் 
   ஒன்ருகப்பிணைந்து, அவனுக்குப் பெருமிதம் 
  ஈந்தது. பேருவகை அடைந் தான். மகிழ்வின் 
   சிற்றலைகள் இதழ்க் கங்கில் ஒதுங்கி நின்ற 
  காட்சியைப் பிரதிபலித்துக்காட்டியது கண்ணுடி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/79&oldid=1490437" இலிருந்து மீள்விக்கப்பட்டது