பக்கம்:இனிய கதை.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 95



        அவன் தனக்குத்தானே 
       பூரிப்படைந்தான்.முரண்டு பிடித்த சுருட்டை 
       முடி கண்ணேக்குத்தியது. வெளிப் 
       படையாகச் சிரித்தவாறே அதை எடுத்து 
       இணைத்தான். தூண்டிவிடப் பட்டிருந்த 
       'ஹரிக்கேன்’ விளக்குப் பக்கமாக இருந்த 
        'அலாரம்' ஒசை கொடுத்தது. ஒழுங்கு 
         மாருமல், கடமைதனை 
         இயற்றுவதில்தான் இந்த யந்திரத்திற்கு 
         எத்துணை பொறுப்பு! 'இத்தனை 
         மணிக்கு எழுப்பவேண்டும்' என்று 
         குறிப்புக் காட்டியதற்கு அனு பிசகாமல், 
         அது தன் கடனை இயற்றி விட்டது. 
        ஆளுல் அதற்கும் ஒருபடி மேலாக நின்று 
        விட்டான் சுசீந்தர்.




       வெளியூர்  செல்ல  வேண்டுமென்ற 
       திட்டத்தை முன்னே வைத்தார் பெரியவர். 
       சுசீந்தர், எவ்வளவு சீக்கிரமாகத் துயில் 
       கலைந்து எழுந்துவிட்டான்! அவன் பார்வை 
       ஜன்னலை ஊடுருவியது. விழித்திருந்த 
       அறை இழைந்திருந்த ஒளிக்கதிர்களின் 
       வெளிச்சம். உறங்கிக் கிடந்த அடுத்த 
      அறையிலும் லேசாக விழுந்திருந்தது. 
      காஷ்மீரச்சால்வையை இழுத்துப் 
      போர்த்துக்கொண்டு புரண்டார் அவர். 
     'இன்னும் அரைமணி தேசகாலம் சென்ற 
      பிறகு அப்பாவை எழுப்பலாம். அது சரி. 
     எனக்கு ஒரு பரிசு கொடுக்கப்போவதாக 
      ஜாடை காட்டினரே அது என்ன பரிசு?



     ஐயத்தின் பிறப்போடு ஆர்வத் துடிப்பும் உடன் 
     பிறந்தது. விளேபலன்: வெய்துயிர்ப்பு!


       சினுக்கல் குரலொன்று கேட்டது.


       கைவிளக்கைப் பொருத்திளுன் சுசீந்தர். 
      ஒளிப் புனலில் பிணையின் உருவம் 
      தெரிந்தது. சிந்தனைப் பொறி தட்டியது. 
       கால்களை உலுக்கி தலையை திசைக்குத்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/80&oldid=1490424" இலிருந்து மீள்விக்கப்பட்டது