பக்கம்:இனிய கதை.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96

                    96


     திசைமாற்றி அசைத்த 'அந்த முறுக்கு நிலை 
   'அவனுக்கு ஒரு நினைவை 
    உண்டுபண்ணியிருக்கவேண்டும். ஒரு வேளை 
   பிணக்கு ஒரு கலையைப் பரிசாகத் தரப் 
    போகின்ருரோ அப்பா?'



   ஒரு கேள்விக் குறியை மையமாக்கிக்கொண்டு 
   ஒன்பது கேள்விகளின் நிழல் படர்ந்தது. 
   தன்னேயும் அறியாமல் தான் இன்னதென்று 
   இனம் காண இயலாத வகையில் ஒரு 
   வகைப்பட்ட உள்ளுணர்வு தழைத்து அதன் 
  தடத்தில் மேனி பூத்து நிற்பதுபோல் அவன் 
  உணரலாளுன். முகம் பார்க்கும் கண்ணுடியை  
  அண்டினன். முகம் கண்டானு? அல்லது அகம் 
  காட்டியதா? அப்பா வாங்கிவந்து கொடுத்த 
  புத்தகங்களில் ஒடியிருந்த பாடல் வரிகள் 
  நெஞ்சடியில் ஒடினவோ? மனத்தை ஒளித்து ஒரு 
  வஞ்சனை இல்லை என்பார்கள். அவனே 
  உள்ளத்துக்குத் தெரியாமல் கள்ள நகை 
  உதிர்த்தான்.



   சுசீந்தர் நடந்தான். வெளிப்புறத் தாழ்வாரத்தின் 
   ஜன்னல் கதவைத் தாழ்விலக்கித் திறந்தான். 
  பயம் மண்டிய பனியும் ஊசியாய்க் குத்திய 
  வாடையும் அவனே அணைந்தன போலும்! 
  நடுக்கம் கிளர்ந்தது. மேல் அங்கியை 
  இழுத்துவிட்டுக் கொண்டான். நேர்நின்ற 
  திசைக்குத் தாவின விழிகள்! எருசசிக்காடு 
  வட்டத் திலே கொக்ரக்கோ சொல்ல யாருக்கும் 
   துணிவு இல்லையோ என்னவோ?


   அங்கியைக் கழற்றி வீசிஞன் அவன். 
   உடலுறுப்புக் களை இயக்கிப் பயிற்சி தந்தான். 
   நெற்றிப்பச்சை நரம் புகள் புடைத்தன. கண்கள் 
  ரத்தச் சிவப்பாக மாறின. பிறகு அந்தப் 
  பெரியவரின் படுக்கையை நோக்கிச் சென்ருன் 
 அவன். 'பரிசு' பற்றிய ஞாபகம் தீக்குச்சி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/81&oldid=1490882" இலிருந்து மீள்விக்கப்பட்டது