பக்கம்:இனிய கதை.pdf/82

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

97

                  97
  யாகி நெஞ்சமெனும் மருந்துப்பெட்டித் தலைப்பில்
  உரசியது. ஆர்வம் எரி தீ ஆனது, 
  "அப்பா!...... அப்பா!. .
     சுசீந்தரனையே உன்னிப்புக் கெடாமல் நோக்கி 
     விழித்தார் பெரியவர்; போர்வை ஒதுங்கியது. 
    ஏதோ ஒர் உந்துதலின் பிடியில் 
   அகப்பட்டவரையொப்ப, விசுக்கென்று எழுந்து 
   நிற்கப்போன  வேளையில் சுசீந்தர் அந்த 
    இடத்திற்கு ஓடி வந்து சேர்ந்தான்.


  ஹுமான் ரமேஷதாஸ் தம்முடைய உடுப்புக்களைச் 
  செம்மைப்படுத்திக்கொண்டார். முகம் 
  துலாம்பரமாக இருந்தது. காலம் முத்திரை 
  அமைத்த சுருக்கங்களையும் துல்லிதமாகப் 
  போக்கடித்துக்கொள்ளக் கூடாதல்லவா? 
 "ஈஸ்வரா!' என்று தமக்குள்ளாக முணுமுணுத்தபடி 
  நகர்ந்தார். இடது கைத்தாங்கலில் இருந்த 
  அந்தத் தேக்குமரத் தடியும் நகர்ந்தது. எடுபிடி 
  ஓடிவந்து கோப்பைக் காப்பியை நீட்டினன். 
 "தம்பிக்கு...?" என்று கேட்டார். 'ஒ!' என்று 
 முன்மொழிந்த குரலுக்கு இணைப் பாக ஆடிய 
  தலையசைவு அவனது நிறைவேற்றப்பட்ட 
  பணிக்கு வழிமொழிந்தது.


  "அப்பா!' என்று விளித்தபடி வந்தான் சுசீந்தர். 
 ஆஹா! அவன் எவ்வளவு எழிலுடன் 
 விளங்குகிருன்!


   "அப்பா' என்ற குரல் செவிகளில் 
   விழுந்ததுதான் தாமதம். பெரியவர் 
   துணுக்குற்றவர் போலத் தடுமாறி நிமிர்ந்தார். 
   எதையோ சொல்ல விழைந்தவராக 
    யோசனையில் ஆழ்ந்தார். பிறகு 
   பெருமூச்செறிந்தவாறு அடங்கினர் ஏதும் 
   உதிர்க்கவில்லை.


    "புறப்படலாமா அப்பா?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/82&oldid=1490881" இலிருந்து மீள்விக்கப்பட்டது