பக்கம்:இனிய கதை.pdf/83

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98

                         98
   “புறப்பட வேண்டியதுதான். நீ வாசலுக்குப்போய் 
   பெட்டி வண்டியை ரெடிபண்ணு தம்பி. நான் 
   கைச் செலவுக்குப் பணம் எடுத்துக்கிட்டு உன் 
    பின்னுடி வருகிறேன்!”


'நல்லதுங்க!"

   சுசீந்தரின் தலை மறைந்த சடுதியில் 
   ரமேஷ்தாஸ் உள்ளே சென்ருர், சேவற்கோழியின் 
   கடமைக் குரல் அவர் நெஞ்சத்தில் 
   எதிரொலித்தது. திரும்பித் திரும்பிப் 
   பார்த்தவண்ணம் ஓர் இருட்டரைக்குள் 
  நுழைந்தார்; சுவரொட்டி விளக்கைப் பெரிது 
  பண்ணினர். கன்னிப் பெட்டியின் முன்னே 
  புதமாகக் குந்தினர். இப்போதும் அந்த 
  ஊன்றுகோல் அவருக்கு கைகொடுக்கத் தவற 
  வில்லை. துரு ஏறியிருந்த பூட்டைத் திறக்க 
  கொஞ்சம் நாழிபிடித்தது. ஓர் உறையை எடுத்து 
  அதை இடுப்பில் சொருகிக்கொண்டு மேல் 
  சட்டையை இழுத்துவிட்டுக்
   கொண்டார் அவர்.


"அப்பா!"


   "இதோ வந்தாச்சு சுசீந்தர்!" என்று அவருடைய 
   சொற்களில் ஒலித்த நடுக்கம், அவரது 
   மேனியிலும் ஊடாடியது.



   சுசீந்தர், பெரியவரை நோக்கி விழித்தான். 
   உள்ளே தெளிந்த ஒளியையும் பார்த்தான். 
  'இந்தப் பழைய பெட்டகத்தை அப்பா திறந்து 
  நான் இதுவரை பார்த் ததே இல்லையே?... ஒரு 
  வேளை என்க்கு என்னமோ பரிசு தரப் 
  போவதாகச் சொன் குரே அதுவாக இருந்தாலும் 
  இருக்கும். அப்பாவாக வாய் திறந்து பேச் 
  செடுக்கும் பரியந்தம் நான் பேச்சைத் 
  தொடுக்கவே கூடாது!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/83&oldid=1490879" இலிருந்து மீள்விக்கப்பட்டது