பக்கம்:இனிய கதை.pdf/84

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

99

                      99


   தத்தித் தத்தி நடந்த முதியவரை 
   கைத்தாங்கலாகப் பற்றி நடந்தான் இளைஞன்.


   உதயராகத்தில் திளைக்கத் தொடங்கியது. அந்த 
   ஒற்றைத் தனிக்குடில்!



   "அன்புக்குச் சாதி, மதம், இனம் என்கிற வேறு 
    பாடு எதுவுமே கிடையாது! இல்லையா?”


           "ஆமாம், அப்பா!"


   சுசீந்தரின் ஒப்புதல் மொழி கைகோர்த்துத் 
   தொடர்ந்த அந்தக் கடைசிச் சொல்லில் வழிந்த 
   பாச  ரமேஷ்தாஸ் முக்குளித்து எழுந்தார். 
   மேனிக் குளிர்ச்சியின் சிலிர்ப்பு அவரை ஒரு 
   கணம் மெய்மறக்கச் செய்தது. மேலண்ணத்தில் 
   ஒட்டிக் கிடந்த நாக்கைக் கடித்துக்கொண்டார் 
   அவர். ஏன் அவர் அப்படித் தடுமாற வேண்டும்? 
   முகம் வேர்வை யால் நனைந்தது; கண்களின் 
  இமை மயிர்ச் செறிவுக் கோடுகளில் சுடுநீர் 
     கோடு கிறுக்கியது. சமாளித்துக் கொண்டார்.


   "சுசீந்தர் சற்றுமுன்பு நான் சொன்னேனே ஒரு 
   வாசகம்... அதை யார் சொன்னர்கள்?"


    "தெரியுமே!...அண்ணல் காந்தி அடிகள்?"


  "அச்சா!...சரி, பெருங்கோபத்தைப்பற்றி 
  வள்ளுவர் பெருமான் சொல்லிய ஒரு 
 தத்துவத்தை நான் உனக்கு அடிக்கடி 
 ஞாபகப்படுத்துவேனல்லவா?"


    "ஆமாம்!"

"அது என்னவாம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/84&oldid=1490876" இலிருந்து மீள்விக்கப்பட்டது