பக்கம்:இனிய கதை.pdf/85

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100

                     100


   "பெருங்கோபம் கொள்பவன் இறந்தவர்க்கு 
   இணை என்று குறள் சொல்லியிருக்கிறது. 
   அப்பா!" என்று சொன்னுன் சுசீந்தர்.


   சுசீந்தரின் கெட்டிக்காரத்தனத்தை அவர் உள்ளுக் 
   குள்ளேயே புகழ்ந்துகொண்டார். கசக்கும் 
   உண்மை யைப் போன்று, மகிழ்ச்சித் துளிகளின் 
  நுனியில் கண்ணிர் சொட்டியது. இப்படிப்பட்ட 
   நூதன அனுபவ முத்திரைகள் புதிதல்ல என்ற 
  பாங்கிலே, அவர் கூடினப் பொழுது 
  சலனமடைந்து, பிறகு மறுகூடிணத்திற்குள் 
  ளாகவே சலனத் தெளிவு அடைந்தார். 
  கண்ணுடித் துண்டங்களில் கருமணிகளே ஒட்டி 
  உறவாடிய வேளை யில், எருச்சிக்காட்டைத் 
  துண்டித்து, உறவை முறித்துக் கொள்ளப் 
  பிரயத்தனம் செய்துகொண்டிருந்த பெட்டி 
   வண்டியின் நினைவு  கூர்  தீட்டியது. 
   கனவுகளாய் முளைத்து, ஆசைகளாகத் 
  தழைத்து நின்ற இறந்த காலத்தை எண்ணிக் 
   கொண்டார். புள்ளிபோட்டுப் பார்க்கவில்லை 
  புடம்போட்டுப் பார்த்தார். 'ம்... எல்லாமே 
  விளுேதம்தான்!. எல்லாம் உணர்ந்த எல்லாச் 
   சூட்சும மும் அறிந்த__எல்லா நடப்புக்களையும் 
   எடைபோட்டுத் தீர்ப்பு வழங்கத் தெரிந்த 
  ஆண்டவனின் கைப்பிடியால் இந்த மனிதன் 
  வாஸ்தவமாகவே ஒரு தாலாட்டுப் 
   பொம்மையேதான்!...சிலந்திவலேமின்னுகிறது. 
   ஈக்களை பிடித்துக் கபளிகரம் 
  பண்ணவேண்டுமென்பது. அதன் உட்கருத்து. 
  ஆளுல் நியதியின் விசித்திரச் சங்கமச் சுழலில், 
   விளைவின் வழி 
   தடம்புரண்டுபோவதில்லையா?... தான் 
   பின்னியவலையிலே தானேசிக்கித் 
   திக்குமுக்காடிப் போவதும் உண்டுதானே?”


  மனித மனம் குறித்த ஓர் எல்லைக்குத்தான் எண் 
  ணங்களை வரம்புக் கட்டித் தாங்கும் 
   சுமைதாங்கியாக இயங்க ஒப்பும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/85&oldid=1490874" இலிருந்து மீள்விக்கப்பட்டது