பக்கம்:இனிய கதை.pdf/86

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

101

    ரமேஷ்தாஸ் தலையைப் பற்றிக்கொண்டார். 
    தலைச் கமையைத் தாளமுடியவில்லைபோலும்! 
  கண்களே இறுக மூடிக்கொண்டு 
  தீவிரச்சிந்தனையின் வசப்பட்டவரானுர்.


    படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் ஏட்டை 
  இடது கைச் சுட்டுவிரலால் அடையாளம் அமைத்த 
  வாறு, சுசீந்தர் பக்கவாட்டில் திரும்பி விழித்த 
  வேளையில், கண்மூடிய ரமேஷ் தாவின் 
  மோனத்தவ நிலை அவனைப் பற்றி ஈர்த்தது. 
 காம்பு கிள்ளி எடுக்கப்பட்ட தாமரை இலையில் 
  தேங்கித் தத்தளிக்கும் நீர்த்திவளைக ளென 
  இரண்டொரு துளிகள் அவர் கண்களில் 
  ஊசலாடியதைக் காணக் கரண, அவனது உள்ள 
  மும் உயிரும் ஊசலாடுவதைப் போன்றே ஒர் 
  உணர்வு எழுந்தது. எதையோ கேட்க வேண்டும் 
  போலிருந்தது. எதையும் கேட்கக்கூடாது என்றும் 
  தோன்றிற்று. பேசாமல்கொள்ளாமல் மீண்டும் 
  'புத்தகப்பூச்சி' ஆனன்!



    பூரணிக் காளை கொம்புகளைச் 
   சிலுப்பிக்கொண்டு, கழுத்துச் சதங்கைகள் 
   'ஜல்,ஜல்' என்று ஒலி கூட்ட, கருமமே 
   கண்ணுனது.


     பாதை வளர்ந்தது.
    ரமேஷதாஸ் வெளிப்புறம் தலையை நீட்டி 
   நீட்டிப் பார்வையைத் துப்பரவு 
   செய்துகொண்டார். பொருமை சூழ்ந்த வஞ்சக 
   நெஞ்சம் மாதிரி இருட்செறிவும், மரச் செறிவும் 
  திகழ விளங்கிய காட்டு வழியை விட்டு 
   மடங்கித்திரும்பியது வண்டி. அப்போதுதான் 
   அவருக்கு நல்ல மூச்சு வந்தது.


  "தம்பி!”
  “என்னங்க அப்பா!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/86&oldid=1490883" இலிருந்து மீள்விக்கப்பட்டது