பக்கம்:இனிய கதை.pdf/89

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 104


     நன்றியறிவு மிக்கவனின் உதட்டுச் 
    சிரிப்புப்போல, கதிரவனின் ஒளி முகம் 
    மெருகு ஏறி வளர்ந்தது.


    'நொடி'களிலே வண்டி குலுங்கிக் குலுங்கி 
    விழுந்து எழுந்தது. மனித வாடையின் 
   குமைச்சல் தாளாமல், மூக்களுங்கயிற்றைப் 
   போட்டு உலுக்கித் தொலைத்தது காளை.



   ஆயிற்று; அதோ, ஆலங்குடி துரோபதை 
  அம்மன் கோயில்!



   இயற்கைத் தாயின் தலைச்சன் குழந்தைக்கு 
   இணை யாகப் பெருமை பூத்து, பெருமிதம் 
   போர்த்து விளங்கி யது அந்தத் தோட்டம் நவ் 
  நவமான பூஞ்செடிகள் அழகழகான வண்ணங்கள் 
  ஏந்தி முகப்பில் நின்று வரவேற்புரை வாசித்தன். 
  புறம் எரித்த வெய்யிலை அண்டவிடலாகாது 
  என்கிற சங்கற்பம் கொண்டிருப் பவைபோல 
  அவை அவ்வளவு நெருக்கமாகக் காணப் பட்டன. 
  தருக்கள் செருக்குடன் திகழ்ந்தன; தளிர்கள் 
  குளிர் பரப்பின; மலர்கள் அலர்ந்திருந்தன; 
   மணம் குணம் நல்கியது.


       ஒற்றைத் தனிக்குடில் அது!



   கைப்பிடிக்கட்டை ரமேஷ்தாஸ் அவர்களுக்குத் 
   துணையாக அமைய, பெரியவர் 
  சின்னவனுக்குத் துணை யாக அமைந்து, வழி 
  மிதித்து, வழி காட்டி, வழி தொடர்ந்தார். அவரது 
  நடையில் ஒரு துள்ளலும், தன்னையே திரும்பித் 
  திரும்பிப் பார்த்த பார்வையில் ஒரு தெம்பும் 
 இழையோடிக் கிடந்ததை அவன் துலக்க மாக 
  உணர்ந்தான். அவ்வுணர்ச்சி தன்னுடைய இதய 
  வினையைமீட்டிட, தான் நூதனமான தோர் 
 உலகத்தின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/89&oldid=1490867" இலிருந்து மீள்விக்கப்பட்டது