பக்கம்:இனிய கதை.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

"ஏம்மா, சீமோடு வீட்டுச் சின்னயா அம்பலகாரர்   பொண்னுதானே நீ?"    இல்லை "நாட்டோடு வீட்டு நல்லதம்பித் தேவமகள்!"

"தடங்கெட்டுப் போச்சு, தாயி. நீ பதினறும் பெத்துச் சொகமாக வாழனும்மா!” "எனக்கு இன்னம் கல்யாணமே ஆகலேயே, கிழவி யம்மா?”

"ஆனப்பறம் ஏஞ் சொல்லுப் பலிக்கும். ஆமா,ஓம்பேரு என்ன, தாயி?..." "பவளக்கொடி"  "அப்படின்ன, அர்ச்சுன மவாராசா கெடைச்சதும்

எனக்குக் கண்ணுலச் சாப்பாடு போடோனும்!” நிச்சயம் போடுவேன், பாட்டி!" "நானும் நிச்சயமாப் பொளைச்சுக் கெடப்பேன்!” பிரிந்த ஒற்றையடிப் பாதைகள் அவர்களைப் பிரித்துவிட்டு வேடிக்கை பார்த்தன. அரிசிக் குறுணையை ம டி யி லி ரு ந் து அவிழ்த்து முறத்தில் கொட்டினுள் செல்லாயி; வியர்வையைத் துடைத்த பின், சேலத் தலைப்பை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டாள்; மூச்சைக் கட்டிப்பிடித்து இழுத்த வண்ணம் முழங்காலிட்டு அமர்ந்தாள்; முறத்தைக் கையிலெடுத்துத் தட்டிப்புடைத்தாள்; கல்லும் நெல்லும் இந்தியப் பூகோளப் படத்தின் பாகிஸ்தானம் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/9&oldid=1491247" இலிருந்து மீள்விக்கப்பட்டது