பக்கம்:இனிய கதை.pdf/90

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 105



     தலைவாயிலிலே அடி எடுத்து 
     வைத்திருப்பதைப் போலவும் ஒரு சிந்தனே 
     தரம்பு 'லயம்' தப்பாமல் பேசத் 
    தொடங்கியிருப்பதையும் அவன் ரசித்துக் 
     கணிக்க மறக்கவில்லை!


    "சுசீ...!" என்ற குறள் விளைந்த சடுதியில் 
    அவன், "இதோ!" என்று குரல் கொடுத்தான்.


      அதே வேளையில், மற்ருெரு புதிய ஒலி, 
       "இதோ!" என்று சத்தம் காட்டியது.


    சுசீந்தரின் கூர்த்தமதியில், முதிய மாது 
   ஒருத்தியின் உருவம் தென்பட்டது. 'யார் இந்த 
   ஸ்திரீ?"



   நடை பயின்ற கேள்வியுடன் கேள் வியாக, சசிந் 
   தரும் நடந்தான். குடிலின் நிலைப்படியில் வந்து 
   நின்ருன். "அப்பா, இருங்க், நானே உங்களை 
   சரியாக உட்காரவைக்க வேணும்." என்று 
   பாசமொழி பிரித் தான். நார்க்கட்டில் மீது ஒரு 
  காலை மடக்கி வைத்துக் கொண்டு, இன்ளுெரு 
  காலே தரையில்தொடும் விதத்தில் 
  நீட்டியிருந்தார். அது இடது கால்; ஆடியது. 
  இடது தோள் பட்டைக்கு முட்டு கொடுத்து உதவிய 
  அந்தத் தடி ஆற்ருமை கொண்டு விளங்குவதைக் 
  காட்டும் பாவனையில், அவரது காலடியிலேயே 
  கிடந்தது.


  பெரியவரை ஒருமுறை ஏறிட்டுப்பார்த்தான் 
  அவன். அப்பா! உங்களை இந்தக் கோலத்துக்கு 
  ஆளாக்கின பழிகாரன் யாரப்பா?' என்று பலபல 
  சந்தர்ப்பங்களிலே ஆத்திரம் பொங்கக் 
  கேள்விக்குறியீடுகளைப் போட்டுக் 
   காட்டியபோதெல்லாம், அவர் 'தம்பி, 
  அன்புக்குக் கிடைத்த பரிசில்தான் எனது 
  இந்நிலை வேறென்ன நான் சொல்லுவேன்? சரி, 
   வேறு பேச்சை எடு,"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/90&oldid=1490700" இலிருந்து மீள்விக்கப்பட்டது