பக்கம்:இனிய கதை.pdf/92

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 107



    "சுசீ! உனக்குப் பரிசு கொடுக்கப் போவதாக 
     நான் சொன்னேன் அல்லவா? அந்தப்பரிசுக்கு 
    மூலாதாரமாக இருந்தவர்-இருப்பவர் இந்த 
    அம்மா வேதான்!” என்றர் ரமேஷ்தாஸ். 
     குரலில் கனிவு சொட்டியது.



    சுசீந்தர் இன்பம் கொண்டான். அந்த 
    அம்மாளின் காலில் விழுந்து கைதொழ 
    வேண்டும்போலிருந்தது. ‘அப்பா, நான் பி. 
    ஏ. பட்டம் பெற்ற இந்த மகிழ்ச்சியில் 
    உங்களுடன் பகிர்ந்துகொள்ள என் தாயரும் 
    இருந்திருந்தால், எவ்வளவு பெருமிதம் 
    உண்டாகியிருக்கும்? அன்னைத் தெய்வத்தின் 
   முகதரிசனம் கிடைக்கக்கூட கொடுத்து 
   வைக்காத பாவி ஆனேனே நான்? பிறந்த 
   வுடனேயே, பெற்றவளே விழுங்கி விட்டேனே?'- 
  பழைய நிகழ்ச்சியின் 'வாடை' தட்டியது. 
  உண்மைப் பழ வினை யின் நிழலா?



     "சுசீ! தம்பி உன்னை இல்லை! இந்த 
    அம்மணிக்கும் சுசீ என்றுதான் பேர். சுசீலா! 
    ஆமாம், சுசீலா! நீ இரு! சுசீ! எங்கே கலா?"



     "இதோ!" என்று பதில் மிதந்து வந்தது.


         "ஓ! வாம்மா!"


   "எழிலுக்கு நானே இலக்கணம்' என்று சொல் 
    லாமல் சொல்லி நின்ருள் அந்தக்கன்னி!



     "நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை ஏதுரைப் 
     பேன்?


     கண்னம்மாவைக் காதலியாகக் 
   கொலுவைத்துப் போற்றிப் புகழ்ந்து அவள்பால் 
   உள்ளம் வைத்துப் பாடிய ஓர் உள்ளத்தின் 
   பாங்குரைக்கும் இவ்வரிகளேசு  சீந்தர் ஆயிரம் 
   முறை நினைத்தான்; மனத்துக்குள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/92&oldid=1490707" இலிருந்து மீள்விக்கப்பட்டது