பக்கம்:இனிய கதை.pdf/95

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

110

                   110


    மாக பணம் ரூபாய் இருநூறு இன்று 
    அனுப்பியிருக் கிறேன். நீ பட்டம் பெற்றதும், 
    உனக்குத் திருமணமும் செய்து 
    வைத்துவிட்டால், என் கடமை முடிந்துவிடும்!” 
    என்று வந்த கடிதமும் சட்டை 
    உரித்துக்கொண்டது. 'அப்பா எனக்குப் பரிசு 
   கொடுப்பதாகச் சொன்னர்களே அந்தப் பரிசு 
    ஒருவேளை... கலாவாக இருக்கக்கூடுமோ? 
   அப்படியே இருந்துவிட்டால், எவ்வளவு 
   அற்புதமாக இருக்கும்' என்று அவன் சிந்தனை 
   ஓடியது.



    ரமேஷ்தாளலாம் சுசீலாவும் அவ்விடம் திரும்பிய 
     தருணத்தில் சுசீந்தர் இதழ்.சிவக்க நின்றன்; 
    கலாவல்லி கன்னம் சிவக்கக் காணப்பட்டாள் ! 
    இருவருக்கும் வெட்கமா?
 



    "சுசீந்தர், சற்றுநேரம் என்னுடன் தனியாக 
     வருகிருயா? என்றர் அவர்.



    அவன் அவரைத்தொடர்ந்தான். பயிர்த் 
   தொழிலுக் காக கட்டப்பட்டிருந்ந நீர்த்தேக்கத் 
   தொட்டிலின் விளிம்பில் அவருடன் அவனும் 
   அமர்ந்தான். சூடு தணிந்த கதிர்க் கற்றைகள் 
   தண்ணிர்த் துளிகளுடன் அணைந்து விலகி 
   மகிழ்ந்திருந்தன.



     "தம்பி சுசீலா தன் உயிரைப்போல 
      வளர்த்தபெண் கலா. திருச்சியில் 
     ஹோலிக்ராஸில் படித்தவள். இண்டர் படிப்பு 
   போதாதா? உனக்கு ஏற்ற அழகி கலா. குணக் 
    குன்று கலா. நான் உனக்குக் கொடுப்பதாகச் 
    சொன்ன பரிசு கலாதான்! உங்கள் திருமணம் 
   முடிந்துவிட்டால், அப்பால் என் மனம் சாந்தி 
   பெற்றுவிடும். உங்கள் இன்பச் சுழலிலே 
   பிணையும் கலையும் ஒடியாடித் திரிந்து 
   குதுகலம் அடையவும் ஆரம்பித்துவிடும்' என்ருர் 
   அவர். இமைகளின் வரம்புகளில் நீர்ச்சரம் 
   தொடுத் திருந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/95&oldid=1490706" இலிருந்து மீள்விக்கப்பட்டது