பக்கம்:இனிய கதை.pdf/96

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 111


   "உங்கள் விருப்பம் எதுவோ அதுவேதான் என் 
   கடமை!" என்று குனிந்ததலை நிமிராமல் 
   பதிலிறுத்தான் சுசீந்தர்.



     முதியவர் ஆனந்தக் கண்ணிர் பெருக்கினர்.


      இரவு தாழ்வாரத்தில் படுத்துக்கொள்ள வந்த 
     சுசீந்தர், பையிலிருந்த துப்பட்டியை 
     எடுத்தபோது, பழைய கிழிசல் காகிதம் ஒன்று 
     வந்து விழுந்தது. விளக்கைத் தூண்டினன்;  
   அதன் தலைப் பகுதி தீயிக்குப் பதில் 
   சொல்லியிருந்தது. தெரிந்த வாசகம் இது 
   "இல்லையென்ருலோ, உன்னைச் சந்திக்கு 
   இழுத்து வைத்து, ஆட்டிப் படைத்து விடுவேன். 
  விதி என்ருபத்தில் உன் வாழ்க்கையிலே 
   விளையாடிவிடும் உஷார்! ‌‌ உன் எதிரி." 
    அவ்வளவுதான்!



   சுசீந்தர் இரவு பூராவும் ரத்தக்கண்ணிர் 
    வடித்தான்!


    விண்ணும் மண்ணும் நிறைந்து விளங்கிய 
   தெய்வங் கள் குடியேறியிருந்த அந்தச் 
   சித்திரங்களின் திருச்சந்நிதானத்திலே, 
   சுசீந்தரும் கலாவல்லியும் தம்பதி ஆயினர். 
   மனமாலைகள் கோலமிட, கோல நகை தாங்கி 
   நின்றனர். மெய்பதித்து வணங்கி மீண்டனர்.


    நமஸ்காரம் செய்த இருவரையும் நெஞ்சு 
   நிறைய வாழ்த்தினர்கள் ரமேஷ் தாஸும், 
   சுசீலாவும். அட்சதை மணிகள் தூவி, திருநீறு 
   பூசினர். இதயக் கனிவுடன் வாழ்த்தினர்கள்!



   கலாவல்லி மஞ்சள் தாலியைத் தொட்டுத் தொழு 
   தாள். விழிகளில் இன்பக் கண்ணிர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/96&oldid=1490705" இலிருந்து மீள்விக்கப்பட்டது