பக்கம்:இனிய கதை.pdf/97

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 112


   சலனம்கண்டிருந்த உள்ளத்தைக்காட்ட விரும்பாத 
   வனைப் போன்று, களை சேர்த்துத் திகழ்ந்தான் 
   சுசீந்தர். இருந்தாலும், அவன் கண்ளுேட்டம் 
   பெரியவர் மீதே ஆரோகணித்திருந்தது. அதைத் 
  திருப்ப முடியவில்லை!



     சுசீலா பரிமாற, தம்பதியுடன் அமர்ந்து ரமேஷ் 
    தாஸாம் கல்யாணச் சாப்பாட்டை முடித்தார். 
   பிறகு, சற்று நேரம் ஓய்வு எடுப்பதாகச் 
   சொல்லிச் சென்றர்.



     புது மனைவி ஆசையுடன் பேச விழைந்து 
     நெருங்கி வந்தும்கூட, எதையோ 
    நினைத்துக்கொண்டவனுக, விரைந்து 
    பிரிந்தான் அவன்.



       அப்போது:


   கோப்பையை இதழ் ஒரத்தே கொண்டு சென் 
  ருர் ரமேஷ் தாஸ். அதைத் தடுத்துத் 
  தள்ளிவிட்டான் சுசீந்தர். பின்னர் சாவதானமாகச் ‌‌        
  சொன் னுன்; "உங்களை நான் நேற்றிரவே 
  இனம் கண்டுவிட்டேன். எங்கள் மனவினைக்கு 
  முன்னதாக, உங்கள் இதயத்தை எடுத்துரைத்த 
  இந்தக் கடிதத்தையும் உங்கள் ரகசியப் 
  பையினின்றும் பிரித்தெடுத்துப் பார்த்தேன். எப் 
 போதுமே என் பார்வையில் பூட்டப்பட்டே 
  காணப்பட்ட பெட்டகமும்  நேற்றிரவு உடைபட்டது. 
  உங்களது இனிய நல் வாழ்க்கையிலே 
  வெறியாட்டம் நடத்திய ஒரு மனிதப்பேயின் 
  பயங்கர உருவத்தையும் அப்போது
  நான் கண்டேன்!”


    இன்னும் என்னென்ன சொல்ல 
   வேண்டுமென்று துடித்தானே, சுசீந்தர்? உடல் 
   நடுக்கம் நாவைத் தடுத் தது. மறைத்து 
  வைத்திருந்த அக்கடிதம் வெளிச்சத் திற்கு 
   வந்தது. அது பேசவும் தொடங்கியது:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/97&oldid=1490701" இலிருந்து மீள்விக்கப்பட்டது