பக்கம்:இனிய கதை.pdf/98

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 119



         "உயிருக்குயிரான சுசீந்தர்!"


        இன்று உனக்கு ஒரு சுப நாள்.


       இன்று எனக்கும் ஒரு நல்ல தினம்.


     மனம் திருந்திய அல்லது மனச்சாட்சி 
     திருந்திய என்னுடைய இந்தப் பொய்யான 
    உருவத்தின் பின்னே மறைந்திருக்கிற 
    உண்மையை நீயும் அறிந்துகொள்ளக் கூடிய 
    வேளை இன்றுதான் வாய்த்திருக்கிறது.


      சில உண்மைகளை இப்போது நான் 
     உனக்குத் தெரியப்படுத்தியாகவேண்டும்.


    சுசீலா இருக்கிருளே, அவள் யார் தெரியுமா?



     அவள் என் ஆருயிர்த் துணைவி
    அவளை நான் காதலித்தேன். செல்வர் வீட்டுச் 
    சீமானின் அருமைப் புதல்வனுன என்னையும் 
   அவள் நேசித்தாள். இதற்கிடையில், எங்கள் 
   கல்யாணத்துக் கான ஏற்பாடுகள் நடந்தன. 
   அப்போது ஓர் உன்மத்தன் உருவத்திலே 'விதி' 
   தாறுமாருக விளையாடியது. கொண்ட மனைவி 
   கைக் குழந்தையுடன் இருக்கின்ற நேரத்திலே, 
   அந்த வெறியனுக்கு சுசீலா பேரில் மையல் 
   ஏற்படவே, வண்ணுத்திப் பூச்சியைப் பிடிக்க 
  வலை பின்னும் சிலந்தியானுன் அவன். 
  அவன்தான் ஆண்டியப்பன். முகூர்த்த நாளுக்கு 
   முன்னே சுசீலாவை கடத் திச் செல்ல ஆட்களை 
  ஏவிஞன். துப்பறிந்த நான் என் உயிரையே 
   பணயம் வைத்து என் சுசீலாவின் மானத் 
  தையும் உடலையும் காத்துக்கொண்டேன். 
  திருமணத் தன்றைக்கும் கலாட்டா செய்தான். 
 அவன் கொடுத்த பரிசுதான் என்னுடைய இந்த 
   ஊனம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/98&oldid=1490699" இலிருந்து மீள்விக்கப்பட்டது