பக்கம்:இனிய கதை.pdf/99

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 114


   ஆளுல், அன்றிரவு நான் அவனுக்குக் கொடுத்த 
  'கழி வீச்சு' அவனுடைய உயிரைப் 
  பறித்துக்கொண்டு விட்டது! நான் செய்த பாவம் 
  எனக்குத் தோன்ருமல், நான் சுசீலாவுக்கு 
 அருளிய   தாலிதான் பெரிதாகத் தோன்றியது. 
 சுசீலாவின் கண்ணிர் என்னைக் கோழை 
 யாக்கியது. அவள் மீதிருந்த காதல் வெறி  
 என்னைப் பயந்தாங்கொள்ளியாக்கியது. ஆகவே 
 மூன்ரும் பேருக்குத் தெரியாமல் நடந்த இந்த 
 நடப்பை அம்பலப்படுத்தி விடாதிருக்கச்செய்யும்படி 
 ஆண்டியப்பனின் மனையாட்டி யிடம் 
 கெஞ்சினேன், அவள் தெய்வம்! 
 ஒப்புக்கொண்டாள்! அடுத்த நாள் அவள் தன் 
 சிசுவை என் வீட்டில் போட்டுவிட்டு, கணவனின் 
 வழியே சென்று மறைந் திட்டாள்! அந்தத் 
 தெய்வத்தை எப்படி உன்னிடம் இனங்காட்ட 
 முடியும்?


   அந்தப் பெண் தான் உன்னை ஈன்ற தெய்வம்! 
   என் மானத்தைக் காத்த தெய்வம்!


     கலா என் மகள்!


  என் மனச்சாட்சியின் துன்புறுத்தல்காரணமாகவே, 
  சுசீலாவும் நானும் இதுநாள் வரை 
  பிரிந்திருக்கின்ருேம்! ஊர்ப் 
 ப‌யமுறுத்தல்களுக்குப் பயந்து, அச்சுறுத்தும் 
 அனுமதேயக் கடிதங்கட்கு அஞ்சி, செங்கற்பட்டுப் 
 பகுதியைவிட்டுப் பிரிந்து வந்த நான், 
 என்மனச்சாட் சிக்குப் பயந்து எங்கே ஒளிவேன்?


  அதற்கு ஒரு திட்டம் வகுத்திருந்தேன். அந்தத் 
  திட்டத்தைச் செயற்படுத்தவே, உன்னிடம் என் 
  மகள் கலாவை ஒப்படைக்கத் துடித்தேன். அந்தக் 
  கனவும் பலித்துவிட்டது. இனியும் நான் என் 
  வேஷத்தை உன் முன் கலைத்துக் கொள்ளாமல் 
 இருக்க என் மனம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இனிய_கதை.pdf/99&oldid=1490385" இலிருந்து மீள்விக்கப்பட்டது