பக்கம்:இன்னமுதம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ●

இன்னமுதம்


அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

“மணம் நிறைந்த மலையினையும், நீண்டு உயர்ந்துள்ள சாரலையும், வளர்ந்துள்ள வேங்கை மரங்களையும், அடர்ந்த சோலைகளினிடத்து அழகிய வண்டுகள் யாழ்போல் இசைக்கும் சைக்கும் சிறப்பையும் உடையது குற்றால மலையேயாகும் - அழகிய பால், நெய் முதலியவற்றால் அபிஷேகம் கொண்டருளுகின்ற றைவன் கொன்றை மலர் அணிந்து தங்கியுள்ள இடம்.”

(வம்பு ஆர் குன்றம் - மணம் நிறைந்த மலை; சாரல்-பக்க மலை; கோல வண்டு- அழகிய வண்டு; அம் பால் நெய்யோடு- பால் நெய்யோடு நீரையும் ஆடலை விரும்பியவன்; நமரங்காள்- நம்மவர்களே.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/18&oldid=1550814" இலிருந்து மீள்விக்கப்பட்டது