பக்கம்:இன்னமுதம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொது

கொடிமாடச் செங்குன்றூர் என்ற பழம் பெயரையுடைய திருச்செங்கோட்டிற்குப் பெருமான் எழுந்தருளிய பொழுது அடியார்கட்குச் சுரநோய் கண்டிருந்தது. “இது பழவினையின் பயன்” என்று சமாதானம் கூறிக்கொண்டு அவர்கள் தம் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருந்தனர். இதை அறிந்த திருஞானசம்பந்தர் அவ்வாறு பழவினைப் பயன் என்று கூறிவிட்டால் “இறைவன் கருணையை எவ்வாறு அறிவது?” என்று கூறி “அவனை அன்புடன் வேண்டுவதன்மூலம் பிராரத்துவ வினையையும் அழிக்கலாம்” என்ற கருத்தில் இப்பாடலைக் கூறுகிறார்.

அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும்
உம்தமக் கூனமன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/22&oldid=1550992" இலிருந்து மீள்விக்கப்பட்டது