பக்கம்:இன்னமுதம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைக்குறிப்புகள் அ.ச.ஞானசம்பந்தன்

● 21


கைவினை செய்தெம் பிரான்கழல்
போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத்
தீண்டப்பெறா; திருநீலகண்டம்

“நாம் முன் பிறவிகளில் செய்த அந்த வினைகட்கு ஈடாக இப்பிறவியில் இந்தத் துன்பங்களை அனுபவிக்கின்றோம் என்ற கருத்தை அறிந்து பேசும் அடியார்களே! (இதனைக்கொண்டு) இத் துன்பத்தைப் போக்கும் வழியை நாடாது இருப்பதும் உமக்கு இழுக்கு அல்லவா? கைத் தொண்டு செய்து நாம் இறைவன் திருவடிகளைப் போற்றுவோம். (அப்படிப் போற்றினால்) நாம் செய்த வினை (பிராரத்துவ வினை) வந்து நம்மை ஒன்றும் செய்யாது. திருநீலகண்டத்தின் மேல் ஆணை.”

(அவ்வினை -முன் பிறவிகளில் செய்த வினை; (பிராரத்வம் என்று இதனைக் கூறுவர்) இவ்வினை - இப்பொழுது அனுபவிக்கும் சுர நோய்; உய்வினை - தீரும் உபாயம்; கைவினை - கைகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு) பொது - குறிப்பிட்ட ஒரு தலத்தைப் பற்றிப் பாடாமல், பொதுவாகப் பாடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/23&oldid=1550993" இலிருந்து மீள்விக்கப்பட்டது