பக்கம்:இன்னமுதம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாவடுதுறை

ஞ்சை மாவட்டத்தில் மாயூரத்தை அடுத்துள்ள திருவாவடுதுறை என்ற ஊரில் ஞானசம்பந்தர் தங்கியிருக்கும்போது அவர் தந்தையார் சிவபாத இருதயர் யாகம் செய்வதற்குப் பொன் வேண்டுமென்று மகனைக் கேட்கின்றார். எதனையும் இறைவனிடமே கேட்டுப் பெறுகின்ற இயல்புடைய பிள்ளையார் திருவாவடுதுறைப் பெருமானிடம் சென்று பொன் வேண்டுமென்று கேட்டுப் பாடிய பாடலாகும் இது;

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினு முனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்தநஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோயெமை யாளுமா றீதொன்றெமக்கு
இல்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

“துன்பம் ஏற்படுகின்றபோதும், தளர்ந்த நிலை ஏற்படுகின்றபோதும், கொடுமையான நோய்கள் பற்றித் துன்பம் செய்கின்ற போதும் உன் திருவடியை மறவாமல் வணங்குவேன். பாற்கடலில் அமுதத்தோடு சேர்ந்து தோன்றிய ஆலகாலமாகிய நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவனே! ஆவடுதுறையில் உள்ளவனே! யான் விரும்பிக் கேட்கின்றபொருளை நீ தரவில்லையானால் என்னை ஆட்கொண்ட விதம் இதுதானோ? உனது இனிய அருளும் இதுதானோ?”

(இடர் துன்பம்; தளர்- மனத்தளர்ச்சி, அமுதொடு கலந்த நஞ்சு-அமிழ்தத்தோடு கடலில் தோன்றிய ஆலகால விஷம்; மிடறு- தொண்டை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/26&oldid=1551175" இலிருந்து மீள்விக்கப்பட்டது