பக்கம்:இன்னமுதம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

பொது

ஞானசம்பந்தர் தனது திருமண நன்னாளில் மணம் காண வந்து அமர்ந்திருக்கின்ற அன்பர்களைக் கண்டு இறைவன் திருவடி சேரும் நேரம் அணுகிவிட்டதை உணர்ந்து திரு ஐந்து எழுத்தின் பெருமையைப் பாடியதாகும் இப்பாடல்.

காதலாகிக் கசிந்துகண் ணிர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

“இறைவனிடத்துக் காதல் கொண்டு, மனம் கசிந்து, கண்ணிர் நிறைந்து, அந்நிலையில் ஒதுகின்றவர்களை வீடு பேறு பெறச் செலுத்துவது (யாதெனில்) நான்கு வேதங்களைக் காட்டிலும் மெய்ப் பொருளாக உள்ளதும், இறைவனுடைய பெயராக உள்ளதுமாகிய “நமச்சிவாய” என்று சொல்லப்படும் திரு ஐந்து எழுத்து.”

(வேதம் நான்கு- இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/28&oldid=1551181" இலிருந்து மீள்விக்கப்பட்டது