பக்கம்:இன்னமுதம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறச் சமயிகளால் சுண்ணாம்புக் காளவாயில் போடப்பட்டார் நாவுக் கரசுப் பெருமான்; ஆனால், இறைவன் திருவருளால் அந்நீற்றறை (சுண்ணாம்புக் காளவாய்) குளிர்ந்த பொய்கை போன்றிருந்தது. அந்த உணர்வோடு அவர் பாடிய பாடல்; மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூக வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே 'குற்றமிலாத வீணையின் நாதமும், மாலையில் தோன்றுகின்ற நிலவின் குளிர்ச்சியும், வீசுகின்ற தென்றலின் சாயலும், சிறந்த இளவேனில் காலத்தின் மாட்சியும், ஒலிக்கின்ற வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சி போன்ற இன்பமும் பயப்பதாகும் ஈசனாகிய இறைவனின் திருவடி நிழல்” (மாசில் வீணை-சுர இலக்கணங்கள் வழுவாத வீணையின் நாதம்; மாலைமதி-பூரண சந்திரன்; மூசு வண்டு-மொய்க்கின்ற வண்டுகள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/45&oldid=747048" இலிருந்து மீள்விக்கப்பட்டது