பக்கம்:இன்னமுதம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தீஸ்வரன் கோயில் என்று வழங்குகின்ற புள்ளிருக்கும் வேளூரைச் சென்று வணங்கிய நாவுக்கரசுப் பெருமான் பாடுகின்றார். (சிதம்பரத்தை அடுத்துள்ள இவ்வூர் புகை வண்டிப் பாதையில் உள்ளது) பேராயிரம்பரவி வானோரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக்கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளுரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே. "இறைவனுடைய ஆயிரக்கணக்கான பெயர்களை யும் சொல்லித் தேவர்கள் பரவி ஏத்துகின்ற பெருமானை, என்றும் அவனை விட்டு நீங்காத அடியார்க்கு, வாராத செல்வமாகிய பிறவி நீக்கம் என்ற செல்வத்தைத் தருபவனும் (கிடைத்தற்கரிய செல்வத் தைத் தருபவனும்) திரு ஐந்து எழுத்தும் தந்திர சாஸ்திரங்களும் பிறவியைப் போக்குகின்ற மருந்துமாகி, ஆணவம், கன்மம், மாயை என்னும் தீரா நோய்களாகிய மும்முலங்களையும், பிறவியையும் போக்கி அருள்பவனும் திரிபுரங்கள் நெருப்புப்பற்றி எரிய வலிமை பொருந்திய மாமேரு மலையாகிய வில்லைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/46&oldid=747049" இலிருந்து மீள்விக்கப்பட்டது