பக்கம்:இன்னமுதம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 55 அடியார்களது அடிமைத் தன்மையை வகுத்தருளல் அருள் செய்தல் இறைவனின் இன்றியமையாக் கடன் என்பதனை வலியுறுத்தி முறை இடுவர். அவ்வாறு முறை இடாது தம் நெஞ்சோடு நோதலும் உண்டு. கனன்று புகையும் நெருப்பைப்போல் வருந்துவர். அத்துயரம் அளவுக்கு மீறுமானால் இறைவனிடம் முறை இடுவர். உடனே ஆண்டவன் அத்துயரத்தைப் போக்க வேண்டும். அது போலவே நம்பி ஆரூரர் தம் துயரத்தை (கண் இழந்தது) இறைவன் போக்கவில்லையே என்ற வருத்தத்தால் இவ்வாறு பாடுகிறாரம். உடனே ஆண்டவன் அத்துயரத்தைப் போக்க வேண்டும். அது போலவே நம்பியாரூரர் தம் துயரத்தை (கண் இழந்தது) இறைவன் போக்கவில்லை என்ற வருத்தத்தால் இவ்வாறு பாடுகிறார். (மீளா அடிமை- எல்லாப் பிறவிகளிலும் இறைவனுக்கே அடிமையாயிருத்தல்; மூளாத் தீ- பற்றி எரியாத மூட்டத்தில் உள்ள தீ; உள் கனன்று- மனத்தின் உள்ளேயே துயரத்தை வைத்துப் புதைத்து; அல்லல்- துன்பம்; வாளாங்கு இருப்பீர்வாய் மூடி இருப்பீர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/57&oldid=747061" இலிருந்து மீள்விக்கப்பட்டது