பக்கம்:இன்னமுதம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 е இன்னமுதம் ஆகிய திருக்கயிலாய மயிலையிலுள்ள பெருமானை, மிக்க புகழை உடையனவாகவும், கரும்பின் சுவையை உடையனவாகவும், ஏழு இசையோடு கூடிய இனிய தமிழால் நான் புகழ்ந்து பாடிய பத்துப் பாடலையும், ஆழமான கடலுக்குத் தலைவனே! (வருணபகவானே) திருவஞ்சைக்களத்திலுள்ள பெருமானுக்கு நீ அறிவித்தல் வேண்டும், (கயிலையில் பாடியதால், வருணனை நோக்கி இதனை நிலவுலகிலுள்ள அஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு அறிவிப்பாயாக என்று ஆணையிடுகிறார்) (ஊழிதோறு ஊழி. முற்றும் உலகை அழிக்கின்ற ஒவ்வோர் ஊழிக் காலத்திலும்; நொடித்தான் மலை- கயிலாய மலை; சூழ் இசை-மிக்க புகழ்: ஆழி கடல் அரையா- ஆழ்ந்த கடலுக்குத் தலைவனே (வருணனே)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/60&oldid=747065" இலிருந்து மீள்விக்கப்பட்டது