பக்கம்:இன்னமுதம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 61 மலத்தை அற்றுப் போகச் செய்து சிவமாக்கி ஆண்டுகொண்ட தந்தையாகிய சிவ பெருமான் எனக்கு அருளிய முறையை வேறு யார் பெற முடியும்?” முக்தி நெறி-முக்தியடையும் வழி; பழவினைகள் முன் பிறவிகளிற் செய்த நல்வினை; தீவினைகள்; பாறும் வண்ணம்சிதறிப்போகும் வண்ணம்; சித்தமலம்- சித்தத்தில் சார்ந்துள்ள ஆணவம் (மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கும் அந்தக் கரணங்கள் என்றும், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் மும்மலங்கள் என்றும் கூறப்பெறும்; அச்சோவியப்புக் குறி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/63&oldid=747068" இலிருந்து மீள்விக்கப்பட்டது