பக்கம்:இன்னமுதம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 69 வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். 'ஐந்து பொறிகளுடனும் தனித்தனி இயங்குகின்ற அறிவு கண்ணின் வழியே மட்டும் தொழிற்படவும், அளத்தற்கரிய அந்தக் கரணங்கள் நான்கும் சிந்தை வழிச் செல்லவும், மூன்று குணங்களும் அடங்கிச் சத்துவ குணமே மேலோங்கவும், சந்திரனைத் தலையில் சூடிய பெருமான் ஆடும் ஆனந்தக் கூத்து எனப்பெறும் முடிவில்லாத ஒப்பற்ற பெருங்கூத்தைக் காண்பதால் உண்டான பேரின்பமாகிய வெள்ளத்துள் மூழ்கித் திளைத்து மாறுபாடில்லாத மகிழ்ச்சியால் உளம் மலர்ந்தார்.” (ஐந்து பேரறிவு- ஒலி, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும், அவை வெளிப்படக் காரணமாக உள்ள வாய், கண், மெய், செவி மூக்கு என்ற ஐந்து பொறிகளும்; கரணங்கள் நான்கு- மனம், சித்தம், புத்தி, அகங்காரம்; குணம் மூன்று- தாமஸ்: ராஜஸ், சத்துவம், இந்து சந்திரன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/71&oldid=747077" இலிருந்து மீள்விக்கப்பட்டது