பக்கம்:இன்னமுதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மையைக் குழந்தையாகக் கற்பனை செய்து குமரகுருபர அடிகளார் பாடியதாகும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். காலத் தொடுகற் பனைகடந்த கருவூ லத்துப் பழம்பாடல் கலைமாச் செல்வார் தேடிவைத்த கடவுள் மணியே உயிரால வாலத் துணர்வு நீர்பாய்ச்சி வளர்ப்பார்க் கொளிபூத் தளிபழுத்த மலர்க்கற் பகமே எழுதாச் சொல் மழலை ததும்பு பசுங்குதலை சோலைக் கிளியே உயிர்த்துணயாம் தோன்றாத் துணைக்கோர் துணையாகித் துவாத சாந்தப் பெருவெளியில் துரியம் கடந்த பரநாத மூலத் தலத்து முளைத்தமுழு முதலே முத்தந் தருகுவே முக்கட் சுடர்க்கு விருந்திடு மும் முலையாய் முத்தம் தருகவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/75&oldid=747081" இலிருந்து மீள்விக்கப்பட்டது