பக்கம்:இன்னொரு உரிமை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுமைதாங்கிகள்155


ஒரு செமினாருக்காக வந்தோம். அவங்களே அசோகா ஓட்டல்ல ரூம் போட்டாங்க. அண்ணா போன் செய்ததும் அவளும் வாறதாத்தான் இருந்தது. ஆனால் திடீர் தலை வலி. நான் கூட சிக்கிரமாய் போகணும். அவள் தனியா இருப்பாள்.”

சுலோச்சனா சித்தப்பாவின் பக்கம் அடக்கமாக நின்று கொண்டிருந்த தனது பிளஸ்-டு மகன் சங்கரை கண்களால் சுட்டிக்காட்டியபடியே கேட்டாள்:

“இவனுக்கு உங்க யுனிவர்சிட்டில இன்ஜினியரிங் சீட் தேடற முயற்சி எப்படியிருக்கு?”

“எனக்கென்னமோ அண்ணி சங்கரை டைப்பிங்ல சேர்த்துட்டா நல்லதுன்னு தோணுது. அப்புறம் வேலையில் சேர்ந்துகிட்டே ஏ.எம்.ஐ. ஈ. படிக்கலாம்!”

“உன் அண்ணா உனக்குச் சொன்னதை நீ இவனுக்குச் சொல்றீயா?”

“என்ஜினியரிங் படிப்பு உங்க சக்திக்கு மீறினதாச் சேன்னு சொல்ல வந்தேன்!”

“கவலப்படாதப்பா... உன்னையே இந்த அளவுக்கு ஆளாக்கின னங்களுக்கு, எங்க பிள்ளையையும் அதே அளவுக்கு ஆளாக்கத் தெரியும். உன்கிட்ட உதவி தேடி வர மாட்டோம்!”

“சரி நான் வர்ரேன்... அவளுக்கு எப்படியிருக்குதோ!”

“பிளீஸ் டு அட்டென்ட் ஆன் ஹர்!”

சுரேஷ் தர்மசங்கடமாக எழுந்து கோபத்தோடு வெளியேறினான். உடனே பிள்ளையின் அம்மா அந்தச் சூழலை மாற்ற நினைத்தவள்போல் கேட்டாள்:

“உங்களுக்கு இங்கிலீஷ் நல்லா வருதே...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/164&oldid=1368580" இலிருந்து மீள்விக்கப்பட்டது